பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்மாதிரி

Holy Emotions - Biblical Responses to Every Challenge

30 ல் 30 நாள்

இன்று நீங்கள் எந்த உணர்ச்சிப் போராட்டத்தை எதிர்கொண்டு போராடினாலும், தேவனுடைய வார்த்தையின் ஞானத்தோடும் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் நீங்கள் இணையும்போது, நீங்கள் எதிர்கொள்ளும் எந்தப் போரிலும் வெற்றி பெறுவது உறுதி. இனி நீங்கள் கெட்ட ஆத்திரம் பொங்குதல் மற்றும் சேற்றுக்கு இரையல்ல, ஆனால் கிறிஸ்துவின் மிகுந்த அன்பின் காரணமாக நீங்கள் ஜெயங்கொள்ளுகிறவராயிருக்கிறீர்கள்.

தேவன் உண்மையில் உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், அவருடைய திட்டம் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி உள்ள ஒன்று. நீங்கள் உங்கள் உணர்ச்சிப் பிரச்சினைகளை ஜெயிக்க வேண்டும் என்பது தேவனின் தீவிரமான தேவை ஏனெனில் இந்த வரலாற்றுத் தருணத்தில் நீங்கள் அவருடைய மகத்தான திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் சோர்விலும், கோபத்திலும், மனச்சோர்விலும் புரளுவதை தொடர்ந்தால், நீங்கள் எந்தப் பரிசாக இருக்க உருவாக்கப்பட்டிருக்கிறீர்களோ அதை இந்த உலகம் தவறவிட நேரிடும். நீங்கள் தேவனுக்கு வெறும் ஒரு எண்ணாக இருக்கிறீர்கள் என்றும், உங்கள் ஏமாற்றத்தையும் பயத்தையும் ஒரு முரண்பட்ட முறையில் வெளிப்படுத்தி தப்பித்துக் கொள்ளலாமென்றும் நீங்கள் ஒருபோதும் நினைக்கக்கூடாது. நீங்கள் மனிதவர்க்கத்தின் வெறும் ஒரு ஆள் மாத்திரமல்ல, ஆனால் இந்த வரலாற்று தருணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மதிப்புமிக்க ஆதாரம் நீங்கள்.

உங்களால் முடிந்தவரை சிறந்தவராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா? அல்லது அவரது வாழ்க்கைக்கான தேவனின் திட்டத்திலிருந்து உணர்வுபூர்வமாக விலகிச் செல்லும் மனிதகுலத்தின் வளைந்த நிழலாக நீங்கள் இருப்பீர்களா? உங்களை தேவனுக்குத் தேவை! உங்கள் உலகம் தகர்ந்துபோகிற போது மகிழ்ச்சி மற்றும் அமைதியின் வாழ்கிற நிரூபணமாக நீங்கள் இருப்பதற்கு உங்களை தேவனுக்குத் தேவை. ஒழுங்குகெட்டுப் போய்விட்ட கலாச்சாரத்தில் நீங்கள் நீதி மற்றும் பொறுமையின் அழகிய தலைசிறந்த படைப்பாக இருக்க உங்களை தேவனுக்குத் தேவை. "என் வாழ்க்கை என்னைப் பற்றியது மற்றும் என் உணர்வுகளைப் பற்றியதல்ல. என் வாழ்க்கை தேவனுக்குச் சேவை செய்வது மற்றும் அவரது தன்மையை எனது உலகத்திற்கு வெளிப்படுத்துதாகும்!" என்று அறிவிக்கும் ஆண்களையும் பெண்களையும் ஒவ்வொரு தலைமுறையிலும் தேவனுக்குத் தேவை,

உங்கள் இருதயத்தின் பாடலுக்காகவா அல்லது உங்கள் வாழ்க்கையின் கூக்குரலுக்காகவா நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்? நாம் அனைவரும் நமது அன்றாட உணர்ச்சித் தேர்ந்தெடுப்புகளால் உறுதிசெய்யப்படுகிற அந்த ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வோம். நீங்கள் விட்டுச் செல்லும் நிதி, வீடுகள் அல்லது நிலங்களைக் காட்டிலும், பின்வரும் தலைமுறையினருக்கு வழங்குவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணர்ச்சி மற்றும் ஆன்மீக பாரம்பரியம் முக்கியமானது. உங்கள் கலாச்சாரம், உங்கள் குடும்பப் பாரம்பரியம் மற்றும் உங்கள் சூழ்நிலைகள் உங்கள் வாழ்க்கையின் பொருளுக்கு அளிக்கும் உணர்ச்சிப்பூர்வமான மதிப்பு பட்டியலை நீங்கள் பார்க்கும்போது, தேர்ந்தெடுப்பை அவரிடம் விட்டுவிடுபவர்களுக்கு தனது சிறந்ததை தேவன் கொடுக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்!
நாள் 29

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Emotions - Biblical Responses to Every Challenge

தேவன் உங்களைப் படைத்து, இந்த நேரத்தில் உங்களை உருவாக்கினார், அன்பில்லாதவர்களை நேசிக்கவும், கொந்தளிப்பில் அமைதியைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதிர்மறையான மகிழ்ச்சியைக் காட்டவும். இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் இயல்பான மனித உணர்ச்சிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்றும் வேதாகமம் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சாதாரண மற்றும் சில சமயங்களில் அசாதாரணமான சவால்களை இந்த தியானம் உள்ளடக்கியது, மேலும் உங்கள் உணர்ச்சிகளை தெய்வீக வழியில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய வேதகமாக் குறிப்புகளை வழங்குகிறது.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்