வெற்றிக்கான தேவ பாதைமாதிரி

ஆவி மண்டலத்தில், உங்களுக்கான தேவ திட்டத்தை நிறைவேற்றுவதேவெற்றி. இதுவே வேதத்தின்படி வெற்றிக்கான அர்த்தம். இன்று நம்முடைய கலாச்சாரத்தில் வெற்றிக்கு தவறான பல அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. சிலர் உங்களுக்கு எவ்வளவு பணம் இருப்பது என்பதை கொண்டே உங்களுடைய வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். மற்ற சிலர் நீங்கள் பார்க்கும் வேலையில் எந்தளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறீர்கள் என்பதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர். அல்லது சமூக வலைத்தளங்களில் உங்களை எத்தனை பேர் பின்பற்றுகின்றனர் என்பதை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இந்த அனுமானங்களில் என்ன பிரச்சனை என்றால் இவைகள் தேவனுடைய வெற்றித் தரத்தை அடிப்படையாக கொண்டதில்லை.
இயேசு வெற்றியை இப்படியாக வறையறுக்கிறார், “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.” (யோவான் 17:4).
இதே வார்த்தைகளை பவுல் வேறு வார்த்தைகளில் எழுதினார்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” (2 தீமோத்தேயு 4:7).
இன்னும் சொல்லப்போனால், தேவ வார்த்தைகளை வேதத்தை நன்றாக தியானித்து நமது செயல்களும் எடுக்கும் தீர்மானங்களும் அதனை அடிப்படையாகக் கொண்டு இருப்பதே வெற்றி என்று தேவன் யோசுவாவுக்கு சொல்லிக் கொடுத்தார். (யோசுவா 1:8). தேவ அழைப்பை நிறைவேற்றுவதை உள்ளடக்கியதே வெற்றி.
வெற்றியை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?
அது தேவனுடைய வரையறையோடு ஒத்துப் போகிறதா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

எல்லோரும் வெற்றி அடைய விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் வெற்றி அடைவதில்லை ஏனெனில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தவறான அர்த்தம் கொடுத்து அதை பின் தொடர்கிறார்கள். உண்மையான வெற்றியை அடைய உங்களை பார்வை தேவன் எதை வெற்றி என்று நிர்ணயிக்கிறாரோ அதின்மேல் இருக்க வேண்டும். மிகச்சிறந்த எழுத்தாளரான டோனி இவான்ஸ் அவர்கள் இத்திட்டத்தில் உண்மையான இராஜ்யத்தின் வெற்றி எது என்பதையும் அதை எப்படி அடைவது என்பதையும் விளக்குகிறார்.
More