தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
மனிதன்
சி.எஸ் லூயிஸ் அவர்கள் கடவுளை நாம் துதிப்பதைப் பற்றி இவ்வாறு ஒரு சிந்திக்க வைக்கும் கருத்தைச் சொல்கிறார், “எனது நாய் நான் எழுதியிருக்கும் புத்தகங்களைப் பாராட்டிக் குரைக்க வேண்டும் என்று நான் விரும்புவதில்லை.” நமது துதிகளால் கடவுளுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. துதிப்பதால் கடவுளை ஐஸ் வைத்து நமக்கு வேண்டியவைகளை சாதித்துக் கொள்ளலாம் என்றும் நாம் நினைக்கக் கூடாது. மாறாக கடவுளைத் துதிக்கும் போது நாம் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். நமது பெருமை ஒழிந்து தாழ்மை வளருகிறது. நாம் பரிசுத்தமாக வாழ காரணம் தெரிகின்றது. வாழ்க்கையில் நம்பிக்கை பெருகுகின்றது. நமக்கு நன்மை தருவதால் தான் கடவுள் நமது துதிகளில் பிரியமாக இருக்கின்றார். நாம் முழுமனதோடு உண்மையாகத் துதிக்கும் போது தான் கடவுளிடம் நாம் நெருங்கி வரமுடியும். இந்த சங்கீதத்தில் கடவுளைத் துதிப்பதன் மூலம் தாவீது தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
மாபெரும் வானமும் அதிலுள்ள சந்திரன் நட்சத்திரங்கள் கடவுளின் விரலால் செய்யப்பட்டன, அப்படியானால் அவர் எத்தனை பெரியவர்? அவர் என்னை நினைப்பதற்கும் விசாரிக்கிறதற்கும் அருகதையே இல்லாத சிறு உயிர் என்கிறார். மனிதனுக்கு உலகத்தின் உயிரினங்களின் மேல் அதிகாரம் தந்திருக்கிறார். தேவதூதரிலும் சற்று சிறியவர்களாகப் படைத்திருக்கிறார். மகிமை கனம் ஆகியவற்றால் முடிசூட்டியிருக்கிறார்.
சிந்தனை : கடவுள் எத்தனை பெரியவர் என்றும் நாம் எத்தனை சிறியவர்கள் என்றும் அறிவதுவே ஆராதனை.
ஜெபம் : ஆண்டவரே உமது பெருமையையும் எனது சிறுமையையும் உணர, உம்மை உண்மையாகத் தொழுது கொள்ள எனக்கு உதவும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org