தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
சிந்தனை மொழி
நோய்கள் நீக்குவதிலும், மனநிம்மதி தருவதிலும் யோகா ஒரு உடனடி நிவாரணி போல, எல்லா வியாதிகளுக்குமான ஆல் இன் ஒன் மருந்து போல விளம்பரப்படுத்தப்படுகின்றது. தாவீது கண்டிப்பாக யோகாவைப் பற்றிப் பேசியிருக்க மாட்டார். ஏனென்றால் யோகாவுக்கும் கடவுளைத் தியானிப்பதற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கின்றன.
(1)யோகா என்பது மனதை வெறுமையாக்குவது. கிறிஸ்தவர்களின் தியானமோ, கடவுளின் வேத வார்த்தைகளால் நம் மனதை நிரப்புதல். வெறுமையாக்கப்பட்டு இருக்கும் மனதில் அதிகத் தீமைகள் புகுந்து கொள்ளும் என்பதை இயேசு தனது உவமையில் சொல்லியிருக்கிறார். (மத்தேயு 12:43-45).
(2) யோகா என்பது நாம் ஒரு கடவுள் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆன்மீகப் பயிற்சி. ”நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்று ஆதிப் பாம்பு ஏவாளிடம் சொன்னதை நாம் மறந்துவிடக்கூடாது. கடவுள் கடவுள் தான் மனிதன் அவர் படைத்த படைப்பு தான். இதை மறந்தால் அங்கே ஆன்மீகம் இருக்காது, பேய்த்தனம் தான் இருக்கும்.
(3) யோகா என்பது உடற்பயிற்சி அல்லது மூச்சுப்பயிற்சி தான் என்றால் அதை விளையாட்டுத்திடலில் வீட்டில் செய்து கொள்ளலாம். அதற்கு கடவுளை இழுக்க வேண்டியதில்லை. வெறும் மனதை அமைதிப்படுத்தும் தியானம் என்றால் வீட்டில் அமைதியாக அதைச் செய்யலாம். அது ஆன்மீகத் தியானம் என்றால் வேதாகமத்தை வைத்துக் கொண்டு செய்து கொள்ளலாம்.
(4) நமது இதயத்தின் நினைவுகளைக் கவனிக்கும் கடவுள் நமது தியானத்தைக் கவனிப்பார். நமது ஜெபங்கள் கூட தியானம் தான்.
(5) தியானத்துக்கென்று தாவீது குறிப்பிட்ட நேரம் (காலை - வசனம் 3) இடம் (ஆலயம், சந்நிதி வசனம் 7) ஆகியவற்றை வைத்திருந்தார்.
சிந்தனை : தியானம் தேவை, அது வேதாகமத்துக்கும், இயேசு கிறிஸ்துவுடன் பேசும் ஜெபத்துக்கும் வெளியே போகக்கூடாது.
ஜெபம் : ஆண்டவரே உம்மைத் தியானிக்கவும், உம்மில் திருப்தியடையவும் உதவும், என் மனதில் உம் வார்த்தைகளை நிரப்பும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org