BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 ல் 23 நாள்

மூன்று மற்றும் நான்காம் அதிகாரங்களில், தேவனின் ஆவியின் வல்லமை, தைரியத்துடன் ராஜ்யத்தைப் பகிர்ந்து கொள்ள இயேசுவின் சீஷர்களை எவ்வாறு தீவிரமாக மாற்றுகிறது என்பதை லூக்கா நமக்குக் காட்டுகிறார். அவர் இயேசுவின் சீடர்களான பேதுரு மற்றும் யோவான் பற்றிய சம்பவத்துடன் தொடங்குகிறார், அவர்கள் திமிர்வாதமுள்ள மனிதனை ஆவியின் வல்லமையால் குணப்படுத்துகிறார்கள் அதிசயத்தைக் கண்டவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், பேதுரு அதை அவரே செய்ததைப் போல அவரைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்த அற்புதத்திற்காக இயேசுவை மட்டுமே மகிமைப்படுத்தும்படி பேதுரு கூட்டத்தைக் கேட்டுக்கொள்கிறார், எல்லா மக்களின் மீட்புக்காக இயேசு எப்படி இறந்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஆலயத்தில் இருந்தவர்கள் தான் இயேசுவை சிலுவையறைந்தவர்கள் என்று பேதுருவுக்குத் தெரியும், ஆகவே, இயேசுவைப் பற்றி மனம் திருந்தி மன்னிப்பைப் பெறும் படி அவர்களை அழைக்க அந்த வாய்ப்பைப் பெறுகிறார். பதிலுக்கு, ஆயிரக்கணக்கானவர்கள் பேதுருவின் செய்தியை விசுவாசிக்கிறார்கள், இயேசுவை விசுவாசிக்க தொடங்குகிறார்கள். ஆனால் எல்லோரும் இல்லை. இயேசுவின் நாமத்தில் பேதுரு பிரசங்கித்து குணப்படுத்துவதைக் கண்டு மதத் தலைவர்கள் கோபமடைந்து, பேதுருவையும் யோவானையும் அங்கேயே கைது செய்கிறார்கள். ஊனமுற்றவர் எவ்வாறு நடக்கத் தொடங்கினார் என்பதை பேதுருவும் யோவானும் விளக்க வேண்டும் என்று மதத் தலைவர்கள் கோருகிறார்கள், அவர்களைக் காப்பாற்றக்கூடிய ஒரே நாமம் இயேசு எப்படி என்பதை பகிர்ந்து கொள்ள பரிசுத்த ஆவியானவர் பேதுருவுக்கு அதிகாரம் அளிக்கிறார். மதத் தலைவர்கள் பேதுருவின் தைரியமான செய்தியைக் கேட்டு, யோவானின் விசுவாசத்தைக் கவனிக்கும்போது திகைப்படைகிறார்கள். இயேசுவின் காரணமாக பேதுருவும் யோவானும் எவ்வளவு மாறிவிட்டார்கள் என்பதை அவர்களால் பார்க்க முடியும், மேலும் செய்த அற்புதத்தை அவர்களால் மறுக்க முடியாது.

நாள் 22நாள் 24

இந்த திட்டத்தைப் பற்றி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com