உண்மை ஆன்மீகம்மாதிரி

உண்மை ஆன்மீகம்

7 ல் 6 நாள்

தீமையை வெற்றி கொள்ளுதல்

நேற்றைய பகுதியானது நாம் மக்களை உண்மைத்தன்மையுடன் நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் பதிலுக்கு நேசத்தைக் காட்டாதவர்களுக்கு நாம் எப்படி பதில் செய்ய வேண்டும்? இன்னும் மோசமாக, உங்கள் விசுவாசத்துக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள், எதிரிகளுக்கு அன்பைக் காட்டுவது எப்படி?

உண்மையான ஆன்மீகம் அநீதியை எப்படிக் கையாளுகின்றது? 

இதைப் பற்றிய தெளிவு வேண்டும் என்றால், இயேசுவைப் பாருங்கள். இயேசுவுக்குப் பல எதிரிகள் இருந்தனர். அவர் உச்சமான அநீதியை அனுபவித்தார். ஆனால் அவர் எவ்வாறாகப் பதிலளித்தார்? 

அன்பினால். பழிவாங்குதல் இல்லை. சபிக்கவில்லை. திருப்பித்தாக்கவில்லை. அன்பு மட்டுமே அவரது பதிலாக இருந்தது. 

நம் வாழ்வில் தீமைக்குக் காரணமாக இருக்கின்ற மக்களைக் கையாளுவது மிகவும் கடினமானதாக இருக்கலாம். அது கெட்ட வார்த்தைகளாகவோ, தவறாகக் கையாளப்பட்டதாகவோ,  அநீதியாகவோ, உறவில் காட்டிக் கொடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம். காயங்களையும் கசப்பையும் தாண்டி நகர்ந்து செல்வதே சாத்தியமில்லாததாகத் தோன்றலாம். 

ஆனாலும் பவுல் நமக்கு இரு பெரும் கட்டளைகளை ரோமர் 12:14-21 என்றபகுதியில் கொடுக்கின்றார். இது எதிர்ப்பின் நடுவில் அன்பு என்ற ஒரு சித்திரத்தைக் கொடுக்கின்றது.  

முதலாவதாக “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்.” (வசனம். 14). 

இயேசுவைப் போலவே நாம் தீமைக்குப் பதிலளிக்க வேண்டும். நாம்உலகத்துடன் ஒத்து வாழாமல், ஜீவபலிகளாக வாழஅழைக்கப்பட்டிருக்கிறோம்.   கர்த்தரின் குணம் ஆசீர்வதிப்பதாக இருப்பதால்,அதையே நாமும் செய்ய வேண்டும். 

இரண்டாவதாக, “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்” (வசனம். 17). 

“கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (வசனம். 18). இது எளிதானது அல்ல, ஆனால் இதைச் செய்வதற்கானகிருபையைக் கர்த்தர் கொடுக்கின்றார். நாம் நற்செய்தியின் மையக்கருத்தைவாழ்ந்து காட்ட அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவைகள், ஆனால் புதுப்பிக்கப்பட்ட மனதுடன்ஜீவ பலிகளாக இருக்கும் நாம், எந்த சூழ்நிலையையும் எதிரானதாகப் பார்க்கக் கூடாது. உண்மையான ஆன்மீகம் என்பது சூழ்நிலைகளை நம் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் கர்த்தரின் கரங்களில் கொடுப்பது ஆகும். கர்த்தரைநம்பி உங்கள் வாழ்க்கையை, உறவுகளை, அழைப்பை அவரை நம்பி அவர் கைகளில் கொடுக்க விருப்பமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

உண்மை ஆன்மீகம்

உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுகள், தீமையுடனான போராட்டம் ஆகிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் மாற்றும் போது உண்மை ஆன்மீகத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். கர்த்தரிடமிருந்து சிறந்தவைகளைப் பெற்று உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/