உண்மை ஆன்மீகம்மாதிரி
உண்மை ஆன்மீகம் துவங்கும் இடம்
“கடவுளே நீ இருந்தால் உன்னை எனக்குக் காட்டு”
நான் நேர்மையாகச் செய்த முதல் பிரார்த்தனை இது தான். நான் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். எனக்கு உதவித் தொகை கிடைத்திருந்தது. அழகான காதலியும் எனக்கு இருந்தாள். ஆனால் எனக்குள் ஒரு வெறுமையும் தனிமை உணர்வும் இருந்தது. ஆகவே நான் கடவுளைத் தன்னை வெளிப்படுத்தும்படி ஜெபித்தேன்.
அவர் தன்னை வெளிப்படுத்தினார். சில வாரங்களுக்குப் பின்னர், கிறிஸ்தவ விளையாட்டு வீரர்களுக்கான ஒரு முகாமில் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் ஜெபத்தை செய்தேன். வாழ்க்கையைப் பற்றிய சில பெரிய கேள்விகளுக்குக் கர்த்தர் பதில்களைக் கொடுக்கத் துவங்கினார்:
· என்னிடம் இருந்து கடவுள் விரும்புவது என்ன?
· உண்மையான கிறிஸ்தவனாக இருப்பது எப்படி இருக்கும்?
· கிறிஸ்தவனாக இருப்பது என்றால் சில சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதும், ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு உயர்வதும் அல்ல என்றால் வேறு என்ன?
· உண்மையான ஆன்மீக வாழ்வு என்றால் என்ன?
என் மாற்றத்தை கர்த்தர் எங்கே துவங்கினார்? ரோமர் 12:1-2. இது வாழ்வின்அர்த்தம் என்ன என்பதைப் பற்றி அதிகமாக விவரித்தது. நம் வாழ்வைக் கர்த்தருக்குக் கொடுக்கும் வகையில் அவரது இரக்கம் எப்படி வழியைத் திறந்தது என்று இது காட்டியது. இது மதம் சார்ந்த செயல்களோ, கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதும் மட்டும் அல்ல என்று விளக்கியது.
கர்த்தருடனான நெருக்கமான உறவைப் பற்றியது இது என்றும், அது எப்படிநம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பல உண்மைகளைக் கொண்டிருந்தது இந்த வேதப்பகுதி.
அந்த நெருக்கமான உறவில் தான் உண்மையான ஆன்மீகம் துவங்குகிறது.
இது தான் நம் ஒவ்வொருவருக்குமான கர்த்தரின் விருப்பமாகும். நமக்குஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் கிருபை மற்றும் பாக்கியங்களை நாம்எப்படி வாழ்ந்து காட்டுவது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவரது மகனைப் போல மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதன் மூலம் நாம் அவரை நேசிக்கவும் அவரை அனுபவிக்கவும் முடியும். இதன் மூலம் பிறரை அவர் நேசிப்பது போலவே நாமும் நேசிக்க முடியும்.
இது வாழ்க்கையை முற்றிலும் வேறு வகையில் மாற்றியமைப்பது ஆகும்.
இந்த உறவின் முழுமையையும் பல கிறிஸ்தவர்கள் அனுபவிக்காமல் இருக்கின்றார்கள். ஆனால் ரோமர் 12 ஆம் அதிகாரமானது நாம் அதை அனுபவிக்க முடியும் என்று சொல்கிறது.
தன்னுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும்படி கர்த்தர் தரும் அழைப்புக்கு நாம் கொடுக்கும் பதில் தான் உண்மை ஆன்மீகம் ஆகும். கர்த்தர் தரும் ஆலோசனைகளுக்கு விசுவாசத்தால் பதில் கொடுக்க நீங்கள் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறீர்களா?
நீங்கள் அப்படி விருப்பம் உள்ளவராக இருந்தால், உங்கள் இருதயங்களும் வாழ்வுகளும் அவருடன் ஒன்றுபட்டிருக்கும். நீங்கள் அவரது உயிரால், வாஞ்சையால், நோக்கத்தால் உண்மை ஆன்மீகத்தின் வாழ்வால் நிரப்பப்பட்டிருப்பீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுகள், தீமையுடனான போராட்டம் ஆகிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் மாற்றும் போது உண்மை ஆன்மீகத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். கர்த்தரிடமிருந்து சிறந்தவைகளைப் பெற்று உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/