Life-to-Life® இரும்பு இரும்பைக் கூர்மைப்படுத்துகிறது: பழைய ஏற்பாட்டில் வழிகாட்டுதல்மாதிரி
நாள் 1: ஆபிரகாமும் லோத்தும்
வழிகாட்டும் நெறிஞராக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் உதாரணமாக இருக்கிறார். அவர் தனது சொந்த ஊரான ஊரிலிருந்து, கடவுளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட புதிய தேசம் நோக்கி மருமகன் லோத்துடன் இணைந்து பயணப்பட்டார்.
துவக்கத்திலிருந்தே, ஆபிரகாம் தனது சாட்சி நிறைந்த வாழ்க்கை வழியாக ஒரு நம்பிக்கை ஊட்டும் அறிவுரையாளராக இருந்தார். ஆபிரகாம் கடவுளைச் சந்திப்பது, பேசுவது, கேட்பது அனைத்தையும் லோத்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆபிரகாம் தனக்கு காட்சியளித்த இறைவனுக்குப் பலிபீடங்களைக் கட்டி தொழுது கொள்வதைப் பார்த்தார். ஆபிரகாம் எவ்வாறு கடவுளை முழுமையாக நம்பிக்கை வைத்து அவரையேச் சார்ந்து வாழ்ந்தார் என்பதை லோத்து கவனித்தார்.
ஆண்டவர் அவர்கள் இருவரையும் அதிகமாகஆசிர்வதித்தார். இருவரது ஆடு, மந்தை, கூடாரங்கள் பெருகியது. ஆகவே அவர்கள் வசித்த இடம் போதாமையால் பிரிந்து செல்ல வேண்டிய காலம் வந்தது. அப்போது ஆபிரகாம் லோத்து குடியேற விரும்பும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை முதலாவதாக அன்புடன் கொடுத்தார். பிறகு ஆபிரகாம் மறு திசையில் குடியேறினார்.
ஆபிரகாம் தனது மருமகனை எப்படிக் கண்காணித்து அவரைப் பாதுகாத்தார் என்பதைக் தியானித்துப் பாருங்கள். லோத்து தனது குடும்பம் மற்றும் அனைத்து உடமைகளையும் இழந்து, சிறை பிடிக்கப்பட்டதை ஆபிரகாம் கேள்விபட்டபோது அவரைக் காப்பாற்ற தீவீரித்து வந்தார். மற்றொருமுறை லோத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அழிவை சந்திக்க இருந்த போது அவர்கள் சார்பாக கடவுளிடம் தீவிரமாக மன்றாடி பரிந்துரை ஜெபத்தை ஏறெடுத்தார்.
இவர்களது உறவிலிருந்து அனுதின நடைமுறை வாழ்க்கைக்கு என்ன விதமான படிப்பினைகளை நாம் கற்றுக்க கொள்ள முடியும்? முதலாவதாக, தனிப்பட்ட சாட்சி நிறைந்த வாழ்க்கையின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்! உங்கள் சாட்சி உடைய வாழ்வின் வழியாக பலருக்கு நீங்கள் சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கிறீர்கள், குறிப்பாக நீங்கள் யாருடன் மிக நெருங்கி பழகுகின்றீர்களோ அவர்களுக்கு.
இரண்டாவதாக, நம்மை அவர்கள் பின்பற்றினாலும், தங்கள் சொந்த விருப்பத்தின் படி செயல்படவும் அவர்களை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் சில காலங்கள் மட்டுமே நாம் அவர்களுடன் இருக்க முடியும். ஆக அவர்கள் நீண்ட காலத்திற்கு சரியான பாதையில் நடப்பதற்கு கடவுளின் பராமரிப்பில் அவர்களை விட்டுவிட வேண்டும். சில சமயங்களில் அவர்கள் ஞானமற்ற, அழிவை தரும் துயரமான முடிவுகளை கூட எடுக்கலாம் (ஆதியாகமம் 19:8, 33,34). ஆனாலும், அவர்களை ஒருபோதும் முழுமையாக நாம் புறக்கனிப்பதில்லை. கடவுளுக்கு சித்தமானால், அவர்கள் வாழ்வில் இடைபடவும், உண்மையைப் எடுத்துரைக்கவும், அவர்கள் இறைவனில் நிலைத்து நின்று கனி தரும் வாழ்வு வாழ தேவையான அனைத்தையும் செய்வதற்கும் நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறோம்.
இந்த திட்டத்தைப் பற்றி
பெரிய ஆணையில் (மத்தேயு 28:18-20) இயேசுவின் கட்டளையைப் பின்பற்ற, "சீஷர்களாக்கும் சீஷர்களை உருவாக்க" நீங்கள் ஏங்குகிறீர்களா? அப்படியானால், இந்த செயல்முறைக்கான முன்மாதிரிகளை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் என்பதை நீங்கள் கண்டறிந்திருக்கலாம். யாருடைய உதாரணத்தை நீங்கள் பின்பற்றலாம்? அன்றாட வாழ்வில் சீடர்களை உருவாக்குவது எப்படி இருக்கும்? ஐந்து ஆண்களும் பெண்களும் எப்படி மற்றவர்களிடம் முதலீடு செய்தார்கள் என்பதைப் பார்க்க பழைய ஏற்பாட்டைப் பார்ப்போம், Life-to-Life®.
More