அடிமைத்தனத்திலிருந்து ஒரு முழுத்திருப்பம்மாதிரி

A U-Turn From Addiction

3 ல் 2 நாள்

மக்கள் போதையில் சிக்கித் தவிப்பதற்கு ஒரு காரணம், அவர்கள் தங்கள் சிந்தனை முறைகளை பொய்களின் மேல் அடிப்படையாக வைத்திருப்பதுதான். போதைக்கு பங்களிக்கும் ஒரு மகத்தான பொய் என்னவென்றால், நீங்கள் மாம்சத்தை மாம்சத்தால் சரிசெய்ய முடியும் என்பதுதான். ஆனால் பவுல் 2 கொரிந்தியர் 10ல் சொல்கிறார்; நாம் மாம்சத்தின்படி யுத்தம் செய்யவில்லை. மாம்சம் மாம்சத்தை சரிசெய்ய முடியாது. ஆம், நீங்கள் அதை சமாளிக்க முயற்சி செய்து, அது சிறிது நேரம் கூட வேலை செய்யலாம். ஆனால் உங்கள் பாவ மாம்சத்தை குணப்படுத்தும் பொருளாக வைத்து பாவச் பிரச்சனையை உங்களால் ஒருபோதும் சரிசெய்ய முடியாது. நீங்கள் ஆதியந்தமாக செய்ய வேண்டியது என்னவென்றால், முதலில் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திற்குச் செல்வதுதான். அவருடைய சத்தியமே உங்களை விடுவிக்கிறது. உடைத்து ஊடுருவி சென்று ஜீவனை கொண்டுவருகிறது அவரது சத்தியம். அவரது உண்மை, துன்பத்தின் பிடியில் உங்களை பிணைத்து, பாவத்திலும் அதன் விளைவுகளிலும் உங்களை சிக்க வைக்கும் பொய்களை அவிழ்க்கிறது.

உங்கள் சொந்த முயற்சியின் மூலம் பாவத்தின் கோட்டையிலிருந்து உங்களை விடுவிக்க முற்படுவதை உங்கள் பாட்டி துணிகளை சலவைப்பலகையில் சுத்தம் செய்ய முற்படுவதை ஒப்பிடலாம். அதைச் செய்ய பல நாட்கள் ஆகும், மட்டுமல்ல அனைத்து முயற்சிகளுக்கு பிறகும் ஆடைகள் சுத்தம் குறைந்ததாகவே இருக்கும். உங்கள் பாட்டி களைப்படைந்து, வேதனையும், விரக்தியாகவும் இருக்கும் போது ஆடைகள் தேய்ந்து மெல்லியதாகும். தேவன் தம்முடைய குமாரன் மூலமாக வழங்கப்பட்ட இரட்சிப்பின் கழுவுதல் மூலம் நமது பாவத்திற்கான தீர்வை வழங்கியுள்ளார். இயேசுவின் தியாகம் நமக்குள் உள்ள ஆவியின் வல்லமையை அணுக வழி தருகிறது. ஆவியானவர் நாம் உண்மையைப் பகுத்தறிந்து பெற்றுக்கொள்ள உதவுகிறார் (யோவான் 16:7-11). யோவான் 8ல் இயேசு சொன்னதைச் செய்ய ஆவியானவர் நமக்கு உதவுகிறார், அதாவது “என் வார்த்தையில் நிலைத்திருங்கள்”. "நிலைத்திருங்கள்" என்ற சொல்லுக்கு வசி, உறுதியாக இரு - தங்குதல் என்று பொருள். நீங்கள் சத்தியத்தை பார்வையிடுவது மட்டுமல்ல அதில் நிலைத்திருக்கவும் வேண்டும். 

உங்கள் அடிமைத்தனத்தை முறியடிப்பதற்கான உங்கள் மாம்சபிரகாரமான முயற்சிகள் எவ்வளவு வெற்றிகரமானவை? ஒரு சிறந்த அணுகுமுறை என்ன?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

A U-Turn From Addiction

உங்கள் வாழ்க்கை கடவுளுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். பலர் தங்கள் உடல்நலத்துடன் போராடி, வேலைகளை இழந்துள்ளனர், உறவுகளை இழந்துள்ளனர், மேலும் போதைக்கு அடிமையானதால் கடவுளிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணர்கின்றனர். போதைப்பொருள் அல்லது ஆபாசப் படங்கள் போன்ற தீவிர அடிமைத்தனம் அல்லது உணவு அல்லது பொழுதுபோக்கு போன்ற குறைவான அடிமைத்தனம் போன்றவையாக இருந்தாலும், போதை பழக்கம் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tonyevans.org/