அடிமைத்தனத்திலிருந்து ஒரு முழுத்திருப்பம்மாதிரி

A U-Turn From Addiction

3 ல் 1 நாள்

கடவுளின் பிள்ளைகளில் பலர் ஆன்மீக போர்கைதிகளாய் இருக்கிறார்கள். அவர்களால் உடைக்க முடியாத பாவச் சுழற்சியில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். குடிப்பழக்கம், பொருளாசை, கசப்பு, பொறாமை, பெருந்தீனி, சுயபச்சதாபம், ஆபாசம், போதைப்பொருள், விளையாட்டம், அவதூறு, சமூக ஊடகங்கள், எதிர்மறையான சுய பேச்சு, ஆத்திரம் அல்லது வெறுப்பு என உணர்ச்சி அல்லது இரசாயன முறைகளுக்கு அடிமையாதல் இன்று பலரையும் சிறைப்படுத்துகிறது. 

அடிமைத்தனம் என்று நாம் இன்று அறிந்திருப்பதற்கான பைபிள் சொல் கோட்டை என்பதாகும். ஒரு போதை அடிமைத்தனம், அல்லது இன்னும் துல்லியமாக - ஒரு ஆன்மீக கோட்டை என்பது நம் மனதுக்குள் எரிக்கப்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் செயல்களின் ஒரு வேரூன்றிய வடிவமாகும். அது கடவுளின் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும், நமது நிலைமை மாறவில்லை என நம்பி நாம் செயல்படுகிறோம். பாவம் நம் எண்ணங்கள், முடிவுகள் மற்றும் செயல்களை ஆளும் அடிமை-எஜமானாக மாறுகிறது. 

போதையிலிருந்து விடுபடுவதற்கான முதல் படி விடுதலை பெற வேண்டுமென விரும்புவதாகும். முழுமை பெற விரும்புகிறீர்களா என்று இயேசு மக்களை கேட்பார் (யோவான் 5:6). ஒரு நபர் சிக்கி, சிக்கிய நிலையிலேயே இருக்கவும் விரும்பினால், அவர்களை சரியான திசையில் நகர்த்துவதற்கு வேறு யாராலும் எதுவும் செய்ய முடியாது. போதை பழக்கத்திலிருந்து விடுதலை என்பது உள்ளிலிருந்து தொடங்க வேண்டும். நீங்கள் ஒரு போதைப் பழக்கத்தில் சிக்கி, எதிர்மறை எண்ணங்களால் தூண்டப்படுவதைக் கண்டால், ஒரு பாம்பானது தன்னை உங்கள் மனதை சுற்றி மூடிக்கொண்டது போல் உணரலாம். 

சுதந்திரத்தை நோக்கி ஒரு புதிய திசையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. சுதந்திரம் என்பது நீங்கள் தற்போது இருக்கும் பாதையில் இருந்து விலகி வேறு திசையில் செல்வதிலிருந்து தொடங்குகிறது. 

உங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடைபெறவும், இயேசு உங்களை விடுவிக்கவும் நீங்கள் உண்மையிலேயே தயாரா?

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

A U-Turn From Addiction

உங்கள் வாழ்க்கை கடவுளுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். பலர் தங்கள் உடல்நலத்துடன் போராடி, வேலைகளை இழந்துள்ளனர், உறவுகளை இழந்துள்ளனர், மேலும் போதைக்கு அடிமையானதால் கடவுளிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணர்கின்றனர். போதைப்பொருள் அல்லது ஆபாசப் படங்கள் போன்ற தீவிர அடிமைத்தனம் அல்லது உணவு அல்லது பொழுதுபோக்கு போன்ற குறைவான அடிமைத்தனம் போன்றவையாக இருந்தாலும், போதை பழக்கம் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tonyevans.org/