எனக்குத் தேவையான அனைத்தும்மாதிரி
அநேக வேளைகளில், நான் என் ஜீவியத்தில் எதோ ஒன்று புதிதாக வேண்டும் என்று ஏங்கும் வேளையில் நான் உண்மையில் ஏங்குவது தேவனுடைய பிரசன்னதிற்க்காக தான், அவருடைய சத்தம் மற்றும் அவருடைய வார்த்தைக்காக. அவருடைய சமூகத்தில், என் வீட்டு அருகாமையில் உள்ள பயமுறுத்தும் பல்லிகள் வேகமாக பயந்தோடும், சமாதானம் ஒரு குளிரான நாளில் உதவும் உஷ்ணமான கம்பிளியை போலவும் இருந்து ஒரு புதிய உற்சாகத்தை தரும்.
நம் இருதயத்தில் உள்ளது என்றும் நாம் அறியாத உற்சாகம்.
அவருடைய சமூகத்தில், நாம் புதிய விதங்களில் தரிசிக்கிறோம். நம்மில் அவர் தங்கி நம்மை உள்ளிலிருந்து முற்றிலும் மாற்றுவதினால் நாம் நம்முடைய இருதயத்தை அவர் பக்கம் திருப்புகிறோம். அவர் வார்த்தையின் சாத்தியத்தால் நம்முடைய நோக்கத்தை பெறுகிறோம். அவர் சமூகத்தில், நாம் விரும்பியதெல்லாம் நம் ஜீவியத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் புரண்டோடும். அந்த அபரிவிதத்தில் நாம் நம் சிருஷ்டிகரோடு சேர்ந்து உருவாக்குகிறோம், அவர் நம்மோடு சேர்ந்து உருவாக்குகிறார்.
அவர் நம்முடைய ஜீவியத்தின் பழைய காய்ந்த காரியங்களை கொண்டு எப்போதும் புதிய காரியங்களை உருவாக்குகிறார். தேவன் எதோ வெறும் உன் சூழ்நிலைகளையும் போராட்டங்களையும் மாற்றி போடுவதில்லை, அவர் அதில் புதிய நிகழ்வுகள், புதிய நினைவுகள் மற்றும் புதிய சாகசங்களை உருவாக்குகிறார்.
தேவனுடைய சமூகம் உடைந்தவைகளை முழுமையாக்குகிறது. நாம் செய்த எதோ ஒன்றினால் அல்ல, அவர் முழுமையாக இருப்பதினால் அவ்வாறு செய்கிறார். அவர் உடைக்கப்படாதவர். அவர் பழுத்தற்றவர். அவர் பிரிக்கப்பட்டு உடைத்தவர் அல்ல. அவர் காயப்பட்டு ஊனமுற்று இருப்பதில்லை. அவர் முழுமையானவர். அவர் காயப்பட்டவர் அல்ல, அவர் நல்ல ஆரோக்கியம் படைத்தவர்.
இயேசு கிறிஸ்துவினால், நாமும் முழுமை அடைகிறோம். அவர் சமூகத்தில் நாம் புதிதாக்கப்படுகிறோம்.
அவரில் நாம் கொண்டிருக்கும் பங்கிற்க்காக அவருடைய சமூகத்தில் போராடுவதை போல ஒன்றுமே இருக்க முடியாது. தருபவரே பின்தொடர்ந்து செல்வதை போல ஒன்றுமே இருக்க முடியாது.
தருபவரை துதியோடும் நன்றியறிதலோடும் பின்தொடரு. ஆராதனையோடும், அவர் வார்த்தையில் உள்ள சாத்தியத்தோடும் பின்தொடரு.
சொந்த முயற்சியை கொண்டு பின்தொடராதே, அது வெட்கத்துக்குரியதாக இருந்தாலும் கூட. உன் சொகுசு நாற்காலியில் அமர்ந்து (தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்க்க தூண்டும்) சோதனையை எதிர்த்து போராடு. எங்கு இரண்டு மூன்று பேர் அவர் நாமத்தினால் கூறுகிறார்களோ அங்கு நான் இருப்பேன் என்று தேவன் வாக்களித்திருக்கிறார். தேவனை கூட்டாக தேடும் போது ஆச்சரியப்படுத்தும் வல்லமையான அற்புதங்கள் நடப்பதை நான் கண்டிருக்கிறேன். என் சொந்த ஜீவியத்தில் அதை நான் கண்டிருக்கிறேன். சமுதாயத்தோடு சேர்ந்து போராடி தேடு. நாம் அவ்வாறு வளரவே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.
தேவனே நல்ல சூழ்நிலைக்கும் மோசமான சூழ்நிலைக்கும் தேவன் என்று பிரகடன படுத்து, காய்ந்த பருவத்திற்கும் கனிகொடுக்கும் பருவத்திற்கும், மும்முரமாக மற்றும் ஓய்வான நேரங்களுக்கும். நாம் இந்த சத்தியத்தை பிரகடன படுத்துவதை காண விரும்புகிறார், ஏனென்றால் இது நல்ல பலமான சத்தியம். நாம் அவர் சத்தியத்தை பேசும்போது, நாம் சந்தோஷத்தை பெற்று நன்றி உள்ளவர்களாக மாறுகிறோம். அவர் நம்முடைய நன்றிகூறுதல், துதி, ஆராதனையை விரும்புகிறார் ஏனென்றால் அது நமக்கு அவர் சிங்காசனத்தில் இருக்கிறார் என்றும் நாம் சந்திக்கும் சூழ்நிலைக்குள்ளாக ஏற்கனவே சென்றுவிட்டார் என்றும் நியாபகமூட்டும்.
இந்த வார்த்தைகளை வாசிக்கும் உனக்காக என் இருதயம் துடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ அவரை அறியவேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எவ்வளவு நல்லவர் என்று அறியவேண்டும் என்று விரும்புகிறேன். அவர் நம்மை தனிமையில் விடுவதில்லை. நாம் உதவிக்காக கேட்கும் போது அவர் நாம் தனிமையில் போராடுவதை வேடிக்கை பார்ப்பதும் இல்லை.
நாம் அவரை தேடும்போது, அவரை கண்டுபிடிப்போம் என்று வாக்களித்திருக்கிறார். நாம் எங்கு இருந்தாலும், எவ்வாறு இதில் சிக்கி இருந்தாலும், தேவன் நமக்காக ஒரு பங்கை அங்கு வைத்திருக்கிறார்.
முடிவு பிரதிபலிப்பு மற்றும் ஜெபம்
தேவனே, ஒவ்வொரு நல்ல பரிபூரண ஈவும் உம்மிடத்திலிருந்தே வருகிறது, எங்களுக்காக எதிர்காலத்தில் எதை கொண்டிருக்கிறீர் என்றும் எங்களால் புரிந்து கொள்ள முடியாது... ஆனால் அதை நீர் ஏற்கனவே வென்று, விலையை செலுத்தி, நாங்கள் பெற்றுக்கொள்ள வழியையும் வகுத்திருக்கிறீர் என்று அறிவோம்.
தேவனே, நீர் எங்கு இருக்கிறீரரோ அங்கு நாங்களும் இருக்க விரும்புகிறோம். உம்முடைய முகத்தை கண்டு, உம் குரலை கேட்டு, பரிபூரண அன்பின் இடத்தில் இருக்க விரும்புகிறோம். கரையற்ற அன்பு. ஒரு புதிதாக பிறந்த குழந்தையை போன்ற அன்பு.
இந்த தருணத்தில், இதை வாசிக்கும் நபரோடு வந்து சந்தியும், ஏனென்றால் அவரை நீர் முழுவதும் அறிவீர். அவர்களின் பாடுகள், யுத்தங்கள், தோல்விகள், எதிர்க்கும் மலைகள் அனைத்தையும் நீர் அறிவீர். ஜெயிக்க தேவையானதை நீர் அறிவீர், அதை ஏற்கனவே நீர் வென்றும் விட்டீர். எங்களுக்கு நீர் கொடுக்கும் நல்ல ஈவுகளை விட, உம்முடைய சமூகத்தை அவர்களுக்கு இப்போதே கொடும்.
அழுத்தத்தின் மத்தியில், இருளின் மத்தியில், பாலைவனத்தின் மத்தியில், நாங்கள் உம்மை துதிப்பதை நிறுத்த மாட்டோம். உம்மை துதித்து, ஆராதித்து, ஆர்ப்பரித்தது, விசுவாசித்து, எங்களை உம்மிடம் தாழ்த்துவோம், எங்களை நீர் இம்மட்டும் எவ்வளவு உண்மையோடு கொண்டு வந்தீர் என்று நினைவில் வைத்திருப்போம்.
நாங்கள் எதிர்பார்ப்போடு உமக்காக காத்திருக்கிறோம், தேவனே. நீரே எங்கள் பரிபூரண பங்கு. எங்களுக்கு தேவையானது எல்லாம் நீரே.
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்லை. இந்த 3 நாள் தியான பகுதி உன்னை உற்சாகப்படுத்தி தேவன் சரியான பங்கு மற்றும் சரியான அளவை உன் ஜீவியத்திற்கு கொடுக்கிறார் என்று உணர வைக்கும்.
More