சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிமாதிரி
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்
சமாதானம் பண்ணுகிறவர்கள் அரிதான ஒரு கூட்ட மக்கள் ஆவார்கள். அவர்கள் அமைதியைக் காக்க முயற்சிப்பார்கள், அத்துடன் பிரிவினையும் சண்டைகளும் இருக்கும் இடங்களில் சமாதானத்தை உருவாக்குவார்கள். சில நேரங்களில் நம்மைச் சுற்றி இருக்கும் பிரச்சனைகள் எதிலும் ஈடுபடாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பது எளியதாக இருக்கலாம். மற்றவர்களின் பிரச்சனைகளில் ஏன் வீணாகத் தலையிட வேண்டும்? என்று நினைக்கலாம். சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய புத்திரர்கள் என்று இயேசு சொல்கிறார். இது மிகவும் சரியானது. ஏனென்றால், தேவன் மனிதர்களுடன் தன்னை ஒப்புரவாக்கிக் கொள்ள இயேசுவை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் ஒரு மாபெரும் சமாதானம் செய்பவர் ஆவார். அவரது பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் நமக்குள்ளும் அதையே செய்வதற்கான இயல்பு இருக்க வேண்டும். பவுல் சொல்வது போல, நமக்கு ஒப்புரவாக்குதலின் ஊழியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது நாம் எப்போதும் மக்களை கர்த்தருடன் ஒப்புரவாக்குவதற்கு ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் நாம் இருக்கும் இடங்களிலும் நுழையும் இடங்களிலும் நாம் அமைதியைக் காத்துக் கொள்ள வேண்டும். உறவுகளில் சமாதானத்தை நாடுவதே நமது முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். இதன் மூலமாக கர்த்தர் யார் என்பது வெளிப்படுத்தப்படவும் அவர் பெயர் மகிமைப்படுத்தப்படவும் வேண்டும்.
கர்த்தரின் பிள்ளையாக, உங்கள் ஆன்மீக டி என் ஏ வில் சமாதானம் பண்ணுகிறவராக இருக்கிறீர்களா? அந்த வல்லமையான நோக்கத்திற்கான வாய்ப்புடன் நீங்கள் வாழ்கிறீர்களா?
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in