சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிமாதிரி
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
இரக்கமுள்ளவர்கள் என்பவர்கள் தொடர்ச்சியாக மற்றவர்கள் மேல் மனதுருக்கம் உள்ளவர்கள். தாங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் என்பதையும் தெய்வீக இரக்கத்தைப் பெற்றிருப்பவர்கள் என்பதையும் அவர்கள் எப்போதுமே மறந்து போய்விடமாட்டார்கள். ஆகவே அவர்கள் அவற்றை பிறருக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் கொடுப்பார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் கர்த்தரிடம் இருந்தும் பிறரிடம் இருந்தும் இரக்கம் பெறுவார்கள். உலகத்தில் இருப்பவர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவது என்னவென்றால், மக்கள் மீது குற்றப்படுத்தாமல் உண்மையிலேயே அக்கறை காட்டுவது தான். இரக்கமில்லாத வேலைக்காரன் என்ற உவமையில், எஜமான் பெரிய தொகையை மன்னித்துவிட்டிருந்தும், தனது உடன் வேலைக்காரனின் சிறிய தொகையை மன்னிக்காத கொடுமையானவனாக இருந்த ஒரு வேலைக்காரனைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பிறருக்கு நாம் இரக்கம் காட்ட வேண்டிய வாய்ப்புக்கள் வரும் போதெல்லாம் இந்த உவமையானது நம்மை கண்டித்து உணர்த்துவதாக இருக்க வேண்டும். மனதுருக்கத்தைக் காட்டுவதில் நமக்கு பெரிய செலவோ செயலோ இருக்காது. ஆனால் அதைப் பெற்றுக் கொள்பவர்களுக்கோ உலக அளவிலான வித்தியாசம் இருக்கும்.
நீங்கள் இரக்கம் காட்டாமல் வைத்திருக்கும் ஒரு நபரைப் பற்றி இன்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியுமா? அவர்களது கடந்த காலம் அல்லது இப்போதைய சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்கள் மீது குற்றம் சாட்டும் மனநிலையைக் காட்டாமல் அவர்கள் மீது அக்கறை காட்டுவதற்கு அதிக முயற்சி எடுப்பீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in