இதன் மூலம் கடவுளைத் தேடுமாதிரி
வாழ்க்கை பல சவால்களை முன்வைக்கிறது, சிலருக்கு இது இளம் வயதிலேயே தொடங்குகிறது. 5-18 வயதிலிருந்தே, நான் தற்கொலை எண்ணங்கள், கோபம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றுடன் போராடினேன். நான் கிறிஸ்துவுக்கு என் இதயத்தை கொடுத்த பிறகும், நான் இன்னும் நம்பிக்கையின்மையுடன் போராடினேன். நம்பிக்கை மற்றும் கடவுளின் அன்பு பற்றிய பல செய்திகளை நான் கேள்விப்பட்டேன், இது எனக்கு ஆறுதல் அளித்தது, ஆனால் என்னை ஒருபோதும் மாற்றவில்லை. உண்மை என்னவென்றால், அந்த செய்திகள் அடுத்த வாரத்தில் செல்ல எனக்கு உதவிய பூஸ்டர்கள் (ஊக்கங்கள்) போல இருந்தன. இருள், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் வாழவும் மன்னிக்கவும் என் போராட்டம் இன்னும் அதிகமாக இருந்தது.
நான் அடிக்கடி நம்பிக்கை வைத்து என் துன்பங்களைப் பகுப்பாய்வு செய்யும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பேன். நான் மனச்சோர்வடைந்த கிறிஸ்தவனாக இருக்க விரும்பவில்லை. நான் மனச்சோர்வடைந்தேன், நாத்திகனாக இருந்தேன். அதனால் மனச்சோர்வடைந்த கிறிஸ்த்துவனாக இருப்பதில் அர்த்தமில்லை என அறிந்தேன். (நானே கெட்டதை எல்லாம் செய்ய முடியும் என்று நகைத்தேன்)
கடவுளைத் தேடத் தொடங்கிய பிறகுதான் அமைதி சாத்தியம் என்றும் அது அவருடைய முன்னிலையில் வாழ்கிறது என்றும் நான் கண்டுபிடித்தேன்.
கடவுளின் சமாதானம் என்பது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் நாம் தொடர்ந்து முதிர்ச்சியடைந்து வருகிறோம்.
அதிர்ச்சி மற்றும் மனச்சோர்வு என்று வரும்போது நாம் அதிகம் தொடர்புபடுத்தக்கூடிய நபர் யோபு என்று நான் நம்புகிறேன். யோபு தான் பிறக்கவே இல்லை என்றால் நலமாயிருந்திருக்கும் என்று ஆசைப்படுகிறேன் என்று திரும்பத் திரும்பச் சொன்ன ஒரு மனிதர். வாழ்வு வாழத் தகாது என்று அவருக்கு உணர்த்தியது.
எப்போதாவது உங்களுக்குத் தொடர்ந்து கெட்ட விஷயங்கள் நடப்பதாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும், வாழ்க்கை உங்களைத் தொடர்ந்து காயப்படுத்துகிறது, அவமானப்படுத்துகிறது? இந்த நேரத்தில்தான் நாம் விரும்பாவிட்டாலும் கடவுளைத் தேட வேண்டும்.
என்னை நம்புங்கள், கடவுளைத் தேடுவது நாம் நினைப்பது போல் கடினமானது அல்ல. கடவுளைத் தேடுவதற்கு, எதையும் தேடுவதைப் போலவே, அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. நாம் எதையாவது கடினமானதாகப் பார்க்கும்போது, அர்ப்பணிப்பிலிருந்து தானாகவே ஊக்கமடைகிறோம்.
நான் இதை அனுபவிக்கப் போகிறேன் என்ற மனநிலையுடன் கடவுளைத் தேடத் தொடங்குங்கள், இது கடினமானது என்ற மனநிலையை அல்ல.நாள்: 1
- காலை முதல் வழிபாடு மற்றும் இரவில் கடைசி வழிபாடு, மறவாமல் இதை கடைபிடியுங்கள். எவ்வளவு காலம் என்பது உங்களுடையது. வழிபடும்போது அவர் யார் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மனச்சோர்வு. கவலை. தூண்டுதல்கள் மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நம்மை மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியாக பாதிக்கின்றன. இப்படிப்பட்ட காலத்தில் கடவுளைத் தேடுவது கடினமானதாகவும் தேவையற்றதாகவும் தெரிகிறது. "இதன் மூலம் கடவுளைத் தேடு" என்ற திட்டம், உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், கடவுளின் அமைதியை நீங்கள் அனுபவிப்பதற்காக, கடவுளின் முன்னிலையில் எவ்வாறு செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கவும் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
More