இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் வணிகம்மாதிரி
ஒரு தவறான இருவகை கருத்து
என் கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல் 28 வருடங்கள் ஒரு பொய்யை நம்பியே வாழ்ந்து வந்தேன்.
கிறிஸ்தவ வட்டாரங்களில் இது மிகவும் பொதுவான ஒரு பொய், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நீங்களும் அதை எதிர்த்துப் போராடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் மதச்சார்பற்ற-புனிதமான இருவகை கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். மேலும் இது எனது திறனுக்குக் கீழே செயல்பட வழிவகுத்தது. வணிகத்திலும் சரி தேவாலயத்திலும் சரி.
நான் விளக்குகிறேன்...
நான் எனது கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டு கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக ஆனபோது, எனக்கு எப்படியோ ஒரு மனக் குறிப்பு கிடைத்தது, அதில் தேவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும்... விசுவாசத்தில் மிகவும் தீவிரமானவர்கள்... முழுநேரத் ஊழியத்துக்கு தங்களை அர்ப்பணித்தனர் என்று இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, புகழ்பெற்ற சுயசரிதைகள், பிரசங்கங்கள் மற்றும் ஊழியங்களும் "இயேசுவுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தவர்களால்" தான் இந்த உலகத்தில் நிரம்பியுள்ளன. அவர்களில் யாரும் வணிகத்திற்குச் செல்லவில்லை (அல்லது அப்படி தான் தோன்றிற்று).
அதனால் நான் தாழ்வாக உணர்ந்தேன். வேதாகம கல்லூரிக்குச் செல்வதற்காக எனது எம்பிஏ படிப்பை விட்டு விலக நினைத்தேன். நான் வணிகத்தில் நிலைத்திருந்தால், நான் எப்போதும் இரண்டாம் தர கிறிஸ்தவனாக இருப்பேன் என்று உணர்ந்தேன், அதாவது தேவாலயத்தில் ஒரு நிதிக் குழுவில் அமர்வது அல்லது உண்மையான ஊழியம் செய்பவர்களுக்கு நிதியளிக்க பிரயாசத்தின் பலனை தருவது போன்ற செயல் மட்டுமே செய்ய முடியும் என நினைத்தேன்.
ஆனால், நான் இரட்சிக்கப்பட்ட நாளில் முழுநேர ஊழியத்திற்கு வரவழைக்கப்பட்டேன் என்பதை என்னால் அடையாளம் காண முடியவில்லை. நீங்களும் அப்படித்தான்.
வணிகம் என்பது இரண்டாம் வகுப்பு அழைப்பு அல்ல என்பதையும் நான் உணரத் தவறிவிட்டேன்.
இருவகை கருத்திற்கு இடம் இல்லை
புனிதம் என்றும் மதச்சார்பற்றது என்றும் இருவகை வேறுபாடில்லை. எல்லாம் ஆவிக்குரியது தான். தேவனுடைய ராஜ்யம் ஒரு தேவாலய கட்டிடத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பரவுகிறது. வணிகர்களாகிய நாம், ஒரு பொதுவான போதகர் செய்வதை விட உலகத்துடன் மிகவும் பயனுள்ள மற்றும் பரந்த தொடர்பைக் கொண்டிருக்கிறோம். மேலும் எதிர்பாராத வழிகளில் தேவனின் அன்பையும் சக்தியையும் காட்ட அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளோம்.
அவர் நம்முடன் இருப்பதாகவும் தேவ ஆவியானவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியிலிருந்து உங்கள் வணிகம் விலக்கப்படவில்லை. இது ஒரு சிறந்த செய்தி, இல்லையா?
தேவன் அவருடைய அறிவுரையையும் அவரது நுண்ணறிவையும் நாம் அணுகுவதற்காகக் காத்திருக்கிறார், எனவே நாம் பரலோகத்தின் தீர்வுகளை பூமியில் பயன்படுத்த முடியும் மற்றும் உலகின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பிப்பதன் மூலம் அவருடைய வழிகளை கற்பிக்க முடியும். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. (ரோமர் 8:19 ஐப் பார்க்கவும்). பரிசுத்த ஆவியானவரால்... பதில்களுக்கான அணுகல் நம்மிடம் உள்ளது. மனிதகுலத்தின் அழுகைக்கான தீர்வுகளின் கண்டுபிடிப்பாளர்கள், படைப்பாளிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும்.
உங்கள் தொழிலையும்... சமூகத்தையும்... தேசங்களையும் மாற்றும் அதே சக்தியை இயேசு குணப்படுத்தும் உடல்களில் வெளிப்படுத்தினார்.
மதச்சார்பற்ற-புனித இருவகை கருத்து பிரிவைத் துறந்துவிட்டீர்களா? இன்று உங்களின் தொழில் மற்றும் வாழ்க்கைத் துறை மூலம் பரலோகத்தை பூமிக்குக் கொண்டு வர நீங்கள் கூட்டாளியாக இருக்கிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நான் பல ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்து வந்தேன். இந்த பொய்யானது கிறிஸ்தவ வட்டாரங்களில் மிகவும் பொதுவானது. நான் மதச்சார்பற்ற-புனிதமான ஒரு கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். அது என்னைத் தடுத்து நிறுத்தியது. பரத்தை பூமிக்குக் கொண்டு வரவும், வணிகம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் தேவன் எவ்வாறு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அளிக்க விரும்புகிறார் என்பதை ஆராய என்னுடன் இத்திட்டத்தில் சேரவும். பெரும்பாலான "முழுநேர ஊழியர்களை" விட இந்த உலகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர உங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, இந்த வேதாகம திட்டம் அது எப்படி என்பதை உங்களுக்குக் காண்பிக்கும்!
More