பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்மாதிரி

Guardrails: Avoiding Regrets In Your Life

5 ல் 2 நாள்

நம்முடைய மிகப்பெரிய மனஸ்தாபங்கள் பெரும்பாலும் நாம் நண்பர்களாகக் கருதும் மக்களுடனேயே தொடர்புடையதாயிருக்கிறது. உங்களுடையது ஒரு சக ஊழியருடனோ, அல்லது கூடப்படிப்பவருடனோ, அல்லது ஒரு பழைய ஆண் நண்பருடனோ தொடர்புடையதாயிருக்கலாம். சந்தித்திருக்கவே கூடாது என நீங்கள் எண்ணிய ஒரு நண்பர் கூட்டமாயிருக்கலாம். நீங்கள் தனியாக இருந்தாலும் கூட, உங்களுடைய மிகப்பெரிய மனஸ்தாபம் எவ்விதத்திலோ ஒரு உறவின் மூலமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 

இந்த துரதிருஷ்டவசமான நட்புகளெல்லாம், நம்முடைய எதிர்காலங்கள் நம்மோடு அதிக நேரம் செலவிடுபவர்களாலேயே (பெரும்பாலும் கடினமாக) பாதிக்கப்படுகிறது என்பதை நமக்குப் போதிக்கிறது. இதனால்தான் நமக்கு உறவுசார் பாதுகாப்பு வேலிகள் தேவைப்படுகின்றன. 

உலகில் இதுவரை வாழ்ந்த மிகச்சிறந்த ஞானிகளில் ஒருவரான சாலமோன் இவ்வாறு எழுதுகிறார்: "ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான் . . ." இன்னொரு விதத்தில் சொல்வதானால், ஞானமானது தொற்றும் தன்மையுள்ளதாயிருக்கிறது. ஞானிகளோடு வாழுங்கள், நாளடைவில், நீங்களும் ஞானிகளாகி விடுவீர்கள். இது தானாக சம்பவிக்கிறதாயிருக்கிறது.

இதற்கு இரண்டாவது பாகமும் உள்ளது: ". . . மூடருக்குத் தோழனோ நாசமடைவான்." நீங்கள் மூடனோடு பழகும்போது, அவர்களுடைய தவறான தீர்மானங்களின் பின்விளைவுகளில் மாட்டிக் கொள்வீர்கள். நீங்கள் வெடித்து சிதறும் வெடிகுண்டைப் பிடித்திருக்கிறீர்கள். உங்கள் நற்பெயரும் அவனுடையதைப்போல் நாசமாகும். நீங்களும் அவளைப்போல் தூக்கி வீசப்படுவீர்கள். நீங்கள் அடுத்தமுறை அழைக்கப்படப் போவதுமில்லை. 

உறவுசார் பாதுகாப்பு வேலிகள் "மதியீனத்தின் வீழ்ச்சியை" நாம் தவிர்க்க உதவுகின்றன.

ஆகவே, உங்கள் நட்புகளைக் குறித்து நீங்கள் யோசிக்கும்போது, நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய மூன்று பாதுகாப்பு வேலிகள் உள்ளன. இவைகளில் ஒன்று சம்பவிக்கும்போது, நீங்கள் தீங்கில் விழும் முன்பதாகவே அது உங்கள் மனசாட்சியைத் தட்டி எழுப்பட்டும்.

1. நீங்கள் நீங்களாக இல்லாமல் வேறொருவரைப் போல் நடித்துக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியவரும்போது.

2. இதற்குமுன் ஒருபோதும் உங்களுக்கு சோதனையாய் இருந்திராத ஏதோ ஒன்றின் மேல் இப்பொழுது நீங்கள் சிந்தை வைக்கும்போது. 

3. நீங்கள் அக்கறை காட்டும் மக்களுக்கு உங்கள் இருப்பிடம் தெரியாது என நீங்கள் நினைக்கும்போது.

பாதுகாப்பு வேலிகள், ஒரு காரியத்தை (அல்லது ஒருவரை) சரி அல்லது தவறு என்று சொல்வதற்காக வைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவைகள் உங்களை ஞானத்தின் பாதையில் நடத்தும் பொருட்டு வைக்கப்படுபவையாகும். எனவே சிந்தியுங்கள், உங்கள் நட்புகளில் ஏதாவதொன்று ஆபத்தான பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறதா? எந்த பாதுகாப்பு வேலியை நீங்கள் இடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Guardrails: Avoiding Regrets In Your Life

நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை - ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நமது உறவுகள், நிதிகள் மற்றும் தொழில்கள் ஆகியவற்றிலும் தடுப்புகள் இருந்திருந்தால் என்ன? அவை எப்படி இருக்கும்? எதிர்கால பின்வருத்தங்களிலிருந்து நம்மை எவ்வாறு அது தடுக்கும்? அடுத்த ஐந்து நாட்களுக்கு, சுய தடுப்பு வேலிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை ஆராய்வோம்.

More

நார்த் பாய்ன்ட் ஊழியங்களுக்கும் ஆண்டி ஸ்டான்லி அவர்களுக்கும் இந்த திட்டத்தை வழங்கியமைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல்கள் பெற, பார்க்கவும்: https://www.anthology.study/anthology-app