பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்மாதிரி

Guardrails: Avoiding Regrets In Your Life

5 ல் 1 நாள்

யாருமே தங்களுடைய வாழ்க்கை பாழாகிவிடாமலிருக்கத் திட்டமிடுவதைக் காட்டிலும் அதிகமாக தங்கள் வாகனம் பாழாகிவிடாமலிருக்கத் திட்டமிடமாட்டார்கள். சாலையில், ஆபத்தான அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு நாம் வழிவிலகி சென்றுவிடாமல் இருப்பதற்காக பாதுகாப்பு வேலிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற பாதுகாப்பு வேலிகள் இருந்தால் எப்படியிருக்கும்?

நம்முடைய பணம், உறவுகள், ஒழுக்கம், மற்றும் உணர்ச்சிகளில் சுய பாதுகாப்பு வேலிகள் நமக்கிருந்தால் நம்முடைய மிகப்பெரிய மனஸ்தாபங்களில் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கவாவது செய்திருக்கலாம்.

சுய பாதுகாப்பு வேலிகள் என்பது மனசாட்சிக்கு உட்படுத்தும் நடத்தைக்கான தரநிலைகளாகும். அவைகள் நீங்கள் அவைகளில் மோதும்போது உங்கள் மனசாட்சியைத் தட்டி எழுப்பும்படிக்கு உங்களுக்கு நீங்களே அமைத்துக் கொள்ளும் விதிமுறைகளாகும். நெடுஞ்சாலை பாதுகாப்பு வேலிகளைப் போலவே, அவைகள் நாம் இன்னும் பாதுகாப்பான நிலையில் இருக்கும்போதே வைக்கப்படுகின்றன. உங்கள் தொழிலில் நீங்கள் தோல்வியடைவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, நீங்கள் ஆபத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு சுய பாதுகாப்பு வேலி சொல்ல வேண்டும். நீங்கள் திரும்பப்பெற முடியாத வார்த்தைகளைப் பேசும் முன்பே, உங்கள் வார்த்தைகளில் கவனமாயிருக்கும்படி ஒரு சுய பாதுகாப்பு வேலி உங்களை எச்சரிக்க வேண்டும்.

நம்முடைய சொந்த பாதுகாப்பு வேலிகளை ஏற்படுத்துவதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு இந்தப் பயனுள்ள ஆலோசனையைக் கொடுக்கிறார்: "நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக் குறித்து மிகக் கவனமாக இருங்கள்—ஞானமற்றவர்களாக அல்ல, ஞானமுள்ளவர்களாக . . ."

எந்த சட்டங்களையும் மீறாமலேயே நீங்கள் குழப்பத்தில் சிக்கிக்கொள்ள முடியும் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் அறிந்திருந்தார் (ஒருவேளை நீங்கள் அனுபவித்திருக்கலாம்). தவறான முறையில் செலவு செய்யாமலேயே நீங்கள் உங்கள் செல்வங்களை அழிக்க முடியும். பாவமான எதையும் செய்யாமலேயே உறவுகளைக் கெடுத்துக்கொள்ள முடியும்.

பாதுகாப்பு வேலிகள் போடப்படுவது, சரி மற்றும் தவறுக்கிடையில் உங்களைப் பாதுகாப்பான பக்கத்தில் வைத்திருப்பதற்காக அல்ல. உங்களை ஞானத்தின் பக்கத்தில் வைத்திருப்பதற்காகவே. 

ஆகவே, அடுத்து வரும் சில நாட்களுக்கு நம்முடைய பணம், உறவுகள், ஒழுக்கம் மற்றும் உணர்ச்சிகளில் நாம் பயன்படுத்தப் போகும் கேள்வி இதுதான்: என்னுடைய கடந்தகால அனுபவங்கள், என்னுடைய தற்போதைய சூழ்நிலைகள், என்னுடைய வருங்கால நம்பிக்கைகள் மற்றும் கனவுகளின் அடிப்படையில், நான் செய்யவேண்டிய ஞானமான காரியம் என்ன?

உங்களுடைய மணவாழ்க்கை . . . உங்களுடைய தொழில் . . . நீங்கள் எங்கே வாழவேண்டும் அல்லது எப்படி நீங்கள் உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதைக் குறித்து நினைக்கும் நேரங்களில் . . . நீங்கள் செய்யவேண்டிய ஞானமான காரியம் என்ன?

இந்த கேள்வி உங்கள் கடந்தகாலத்தில் நீங்கள் மிகவும் மனஸ்தாபப்பட நேர்ந்த ஒரு தெரிவு அல்லது சூழ்நிலையை எவ்வாறு மாற்றியிருக்கும்? இன்று அது உங்களுக்கு எங்கே உதவும்? நீங்கள் விளிம்பிற்கு மிக அருகில் வாழ்ந்து கொண்டிருந்தால், ஒரு பாதுகாப்பு வேலியை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவே. 

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Guardrails: Avoiding Regrets In Your Life

நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை - ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நமது உறவுகள், நிதிகள் மற்றும் தொழில்கள் ஆகியவற்றிலும் தடுப்புகள் இருந்திருந்தால் என்ன? அவை எப்படி இருக்கும்? எதிர்கால பின்வருத்தங்களிலிருந்து நம்மை எவ்வாறு அது தடுக்கும்? அடுத்த ஐந்து நாட்களுக்கு, சுய தடுப்பு வேலிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை ஆராய்வோம்.

More

நார்த் பாய்ன்ட் ஊழியங்களுக்கும் ஆண்டி ஸ்டான்லி அவர்களுக்கும் இந்த திட்டத்தை வழங்கியமைக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல்கள் பெற, பார்க்கவும்: https://www.anthology.study/anthology-app