அமைதியின்மைமாதிரி

Restless

3 ல் 2 நாள்

நேற்று, அமைதியின்மைக்கான தீர்வு ஓய்வுநாள் அனுசரிப்பில் உள்ளது என்பதை கண்டோம் – அமைதியின்மையை உருவாக்கும் காரியங்களிலிருந்து ஓய்தல். நாளைய தினத்தில், இந்த 21ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களான நாம் எப்படி அதை நடைமுறைப்படுத்தலாம் என்பதைக் கண்டறிவோம். ஆனால், அதற்கு முன், இன்றைய கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாள் என்பது எதுவல்ல என்பதை முதலாவது பார்ப்போம். அதை ஓய்வுநாளின் தோற்றத்திலிருந்து துவங்குவதே சரியான துவக்கம் ஆகும்.

தேவன் சீனாய் மலையில் மோசேயிடம் பத்துக்கட்டளைகளை கொடுத்துவிட்டு, ஒவ்வொரு வாரத்தின் ஏழாவது நாளிலும் ஓய்ந்திருக்கும்படி இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுத்தார். இது தேவன் தம்முடைய பிள்ளைகளுடன் செய்த உடன்படிக்கை. மற்றும், ஓய்வுநாள் என்பது எல்லாவற்றையும் படைத்து முடித்து ஏழாம் நாளில் தேவன் தாமே ஓய்ந்திருந்ததை முன்மாதிரியாய் வைத்து துவங்குகிறது.

பழைய ஏற்பாட்டு காலத்தில் ஓய்வுநாள் என்பது மிகவும் கடுமையான விதிமுறைகளுடன் கடைபிடிக்கப்பட்டது. உதாரணமாக, இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளில் அவர்களது வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டுவதும் (யாத்திராகமம் 35:3), உணவு சேகரிப்பதும் (யாத்திராகமம் 16:23-29), சந்தையில் சரக்குகளை விற்பதும் (நெகேமியா 10:31) தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த ஓய்வுநாள் நியமங்களை வேண்டுமென்றே மீறினால், கொலை செய்யப்படுவதே தண்டனையாகும் (யாத்திராகமம் 31:14-15).

நாட்கள் செல்ல செல்ல இஸ்ரவேலர்கள் ஓய்வுநாள் ஆசரிப்பை ஒரு சட்டபூர்வமான உச்சத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் இயேசு இந்த உலகத்திலிருந்த காலத்தில், ஓய்வுநாளில் சுகப்படுத்துவது கூட பாவம் என்றனர். மத்தேயு 12ம் அதிகாரத்தில் ஓய்வுநாளில் இயேசு சுகமளிக்கும் போதும், வயலில் கோதுமையை பொறுக்கிக் கொண்டிருந்த போதும் நேரடியாக எதிர்த்து, சட்டத்திற்கு புறம்பானதை செய்வதாக பரிசேயர்கள் குற்றம் சாட்டினார்கள். இயேசு, "மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்" (மத்தேயு 12:8) என்று அறிவித்து, புதிய உடன்படிக்கை கிறிஸ்துவே என்பதை பறைசாற்றினார். இதே சம்பவத்தை மாற்கு, ‘ "மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது" (மாற்கு 2:27) என்று இயேசு கூறினார்’, என்று எழுதுகிறார். அதாவது, இயேசு, தன் மூலமாக ஓய்வுநாள் என்பது இனிமேல் சட்டத்தின் கட்டளையாக அல்லாமல், ஓய்வின்மைக்கான ஒரு கிருபையின் பரிசாக விளங்கும் என்று சொல்கிறார்.

மனிதர்களுக்கு ஓய்வுநாள் என்னவென்று இயேசு கூறுகிறார்? நடைமுறையில், அந்த பரிசை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்? இந்த வாழ்க்கையை சட்டபூர்வமாக வாழாமல் எப்படி நாம் ஓய்வெடுப்பதை வழக்கமாக்கி கொள்ள முடியும்? இது போன்ற கேள்விகளுக்கு இந்த திட்டத்தின் கடைசி நாளில் விடை காண்போம்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Restless

"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் - "அவர்" மூலமாக - இயேசு - நம்முடைய சமாதான காரணர்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜோர்டான் ரெய்னர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.jordanraynor.com/restless/