அமைதியின்மைமாதிரி
உங்கள் தொலைபேசி படுத்துகிறது. உங்கள் நாட்கள் கட்டுகடங்கா வேகத்தில் செல்கிறது. வேலைகள் முடிந்தபாடாக இல்லை. உங்கள் மூளை வேகமாக செல்கிறது. காலை எழுந்ததும், அன்றைய நாள் முழுதும் பதட்டத்தில் வைத்திரக்கத்தக்க சூழலுக்குள் உடனடியாக தள்ளப்படுகிறீர்கள்.
கேட்ட மாதிரி இருக்கிறதா? இப்பொழுதெல்லாம், முன்பை காட்டிலும், நாம் மிகவும் அமைதியற்று காணப்படுகிறோம். இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்முடைய அமைதியின்மைக்கு காரணமாக விளங்கும் மூன்று காரியங்களை விவாதிக்க விரும்புகிறேன். முதலாவது, நாம் (உலகத்திலுள்ள மற்றவர்களை போல) அதிக நேரம் களியாட்டுகள், சமூக வலைதளம், செயலிகள் மற்றும் விளையாட்டுகளில் செலவழிக்கிறோம். நமக்கு நல் வாழ்க்கையை கொடுக்கத்த இந்த நல்ல காரியங்களெல்லாம் உயிரை குடிப்பதாக அமைந்துள்ளது. இரண்டாவது, நாம் "[தேவனுடைய] வாசலுக்குள் நன்றி செலுத்தி நுழைவதில்லை" அது நம்மை மேலும் அதிருப்தியான ஓய்வில்லா ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. கடைசியாக, இது ஒரு லட்சியத்தோடு ஓடும் நபர்களின் போராட்டம் - தேவனுடைய சுவிசேஷத்தை நினைவுகூர நேரம் ஒதுக்க தவறுகிறோம் மற்றும் கிறிஸ்துவுக்குள் நம் அடையாளம் எவ்வாறாக மேலும் அதிக செயல்கள் செய்வதிலிருந்து விடுவிக்குமென்று மறக்கிறோம்.
இது கேட்க எளிதாக தெரியும், ஆனால் அமைதியின்மை பிரச்சனையாக இருந்தால், அமைதியின்மையை உருவாக்கும் காரணங்களிலிருந்து நாம் ஓய்ந்திருப்பதே அதற்கு தீர்வாகும். உண்மையான ஓய்வையும் சமாதானத்தையும் அனுபவிக்க இந்த உலகத்தின் தொடர் தேவைகளிலிருந்தும் நம்முடைய வேலைகளிலிருந்தும் சீரான இடைவேளை எடுக்க வேண்டும். எப்பொழுதும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று ஓடிக்கொண்டே இராமல், தேவன் நமக்கு கொடுத்தவைகளுக்காக நன்றி சொல்ல நேரம் ஒதுக்க வேண்டும். நம்மை சோர்வடைய செய்யும் (மின்னஞ்சல், ஸ்மார்ட்போன், மற்றும் பல) காரியங்களுக்குப் பதில், ஜீவனை கொடுக்கத்தக்க (நண்பர்கள், குடும்பம், தேவனுடைய வார்த்தை) வாழ்க்கையை தற்காலிகமாக பரிமாற்றம் செய்ய வேண்டும்.
நல்லவேளையாக, வேதாகமத்தில் இளைப்பாறுதலுக்கு ஒரு உதாரணம் இருக்கிறது: ஓய்வு நாள். கொஞ்ச வருடத்திற்கு முன் வரைக்கும் எனக்கு இந்த ஓய்வு நாள் என்பது வினைச்சொல்லாக இல்லாமல் வெறும் பெயர்ச்சொல்லாகவே இருந்தது. இன்றைய கிறிஸ்தவர்களின் பழக்கம் போல அல்ல, அது வாரநாட்களில் ஒரு நாளாகவே இருந்தது. நெடுநாளாக, ஓய்வு நாள் என்பது ஒரு கிருபையின் பரிசாக அமையாமல், சட்டபூர்வமான வேலைநாளாக எனக்கு தோன்றியது. ஆனால், இயசுவினுடைய வார்த்தைகளை உன்னிப்பாக படித்ததின் மூலம், ஓய்வு நாள் குறித்த சிந்தையை அது முற்றிலும் மாற்றியது. இப்போழுது அது இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
நாளைய தினம், இன்றைய கிறிஸ்தவர்களுக்கு ஓய்வு நாள் என்றால் எது அல்ல என்பதை பார்க்கலாம். பண்டைய காலத்தின் அநேக கட்டுக்கதைகளை அவிழ்ப்போம். மற்றும் இந்த திட்டத்தின் கடைசி நாளில், இந்த ஓய்வு நாளை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது மற்றும் இன்றைய வாழ்க்கையில் நாம் எப்படி அதை அமுலாக்கலாம் என்பதை கவனிப்போம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் - "அவர்" மூலமாக - இயேசு - நம்முடைய சமாதான காரணர்.
More