தெய்வீக கால நிர்வாகம்மாதிரி
நம்முடைய கால நிர்வாகத்தில் தேவனுடைய இலக்கு
2009-இலிருந்து கால நிர்வாக பயிற்சியாளனாக, நான் மக்களுக்கு வேலைகளை முடிக்கும் திறன் வளர்ப்பில் நான் உதவியிருக்கிறேன். அது முன்னுரிமைகளை தீர்மானிப்பதிலிருந்து வேலைகளை முடிப்பதுவரை உள்ளாக்கும். ஆனால் 2015-இல் தேவன் நான் என்னுடைய இந்த வேளையில் என்னுடைய கிறிஸ்துவ விசுவாசத்தை உட்புகுத்தவேண்டும் என்று உணர்த்தினார். அது என்னை 'திவ்விய கால நிர்வாகம்' என்னும் ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க உதவியது. அது சங்கீதம் 46:10(TAOVBSI) -இல் சொல்லியிருப்பதுபோன்ற ஒரு பாதை "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.”
திவ்விய கால நிர்வாகம் என்று சொல்லும்போது அது வெறும் நாளின் அட்டவணையில் வேதவாசிப்பை உட்புகுத்துவது மாத்திரம் அல்ல. அது நேரத்தை உபயோகிப்பதில் முற்றிலும் புதிய பாதை.
தேவன் நாம் நம்மை கட்டுப்படுத்தி நம்முடைய வாழ்வை நடத்தமுடியும் என்கிற நினைப்பில் வாழ விரும்புவதில்லை. மாறாக, தேவன் நாம் செய்யும் எல்லாவற்றின் மத்தியிலும் அவர் மீது நம் விசுவாசத்தை வைக்கவேண்டும் என்று விரும்புகிறார்.
சங்கீதம் 127:1-2(TAOVBSI) நம்மை தைரியப்படுத்துவது போல:
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்,
அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.
கர்த்தர் நகரத்தைக் காவாராகில்,
காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
நீ விருத்தாவாய் சீக்கிரம் விழிக்கிறாய்
இரவு கண்விழிக்கிறாய்,
உன்ன உணவிற்காக கடினப்பட்டு உழைக்கிறாய்—
ஏனென்றால் அவரை நேசிக்கிறவர்களுக்கு அவர் நித்திரையை அனுமதிக்கிறார்.”
இந்த மாற்றத்தை உணர,( நாம் சரி என்று நினைக்கும்) தவறான இலக்குகளை நீக்கி சரியான குறிக்கோள்களை கொண்டிருக்க வேண்டும்.
கீழே சில தவறான குறிக்கோள்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
- கட்டுப்பாடு: எல்லாவற்றையும் கட்டுப்படுத்திவிட்டோம், தேவனுடைய உதவி இனி தேவையில்லை என்று யோசிப்பது
- இன்பம்: முடிந்தவரை இன்பமாக உணருவது
- சாதனை: வேலையை முடிக்க எப்போதும் முற்படுவது
- எல்லாவற்றிலும் மிக சிறந்தவனாக திகழ்வது: சுய பெயரை சம்பாதிக்க எல்லாருக்கும் எல்லாவற்றிலும் உதவுவது
இந்த தவறான குறிக்கோள்கள் ஏதேனும் பழக்கமானதாக தோன்றுகிறதா? நான் ஒத்துக்கொள்வதற்கு மேலாகவே இந்த உலகப்பிரகாரமான குறிக்கோள்களுக்குள்ளாக விழுந்திருக்கிறேன். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் நாம் தேவனிடம் திரும்பலாம், மன்னிப்பிற்காக கேட்கலாம், கால நிர்வாகத்திற்கென்று அவரிடம் நம்முடைய ஆசைகளை ஒப்படைக்கலாம்.
அது எளிமையானது, வெறுமனே தேவனிடம், "ஆண்டவரே என்னுடைய [தவறான குறிக்கோளுக்காக] நான் வருந்துகிறேன். உம்முடைய இலக்குகளை விளங்கிக்கொள்ள எனக்கு உதவும், என்னுடைய நம்பிக்கையை உம்மீது வைத்து உம்மை முன்னுரிமையாக வைக்க உதவும்.”
யாக்கோபு 4:13-16(TAOVBSI) எச்சரிப்பதுபோல், தேவன் நம்முடைய காலத்தின் தேவன் என்று உணருவது கிறிஸ்துவர்களுக்கு முக்கியமானது:
“மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.”
நம்முடைய கால நிர்வாகத்தில் தேவன் மீது நம்முடைய நம்பிக்கையை வைப்போம், நம் மீது அல்ல.
இந்த திட்டத்தைப் பற்றி
உலகப்பிரகாரமாக நேரத்தை நன்மையாக கடைபிடிக்கும் பொது நம்முடைய சொந்த பெலத்தாலும் சுய ஒழுங்கினாலும் வாழ்க்கையை அடக்க முயலுவது மன அழுத்தத்தை உண்டாக்கும். வேதாகமம் சொல்கிறது நம்முடைய நேரத்தை தேவனிடம் விசுவாசித்து கொடுக்கும்போது நாம் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்வோம் என்று. இந்த 6 நாள் திட்டத்தில், நேரத்தை தேவனோடு கால நிர்வாகம் செய்யும்பொழுது தேவன் கொண்டிருக்கும் எல்லா நன்மைகளையும், அவருடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று கற்றுக்கொள்வோம்.
More