திருமணம் என்னும் இராஜ்ஜியம்மாதிரி
![Kingdom Marriage](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12962%2F1280x720.jpg&w=3840&q=75)
ஒரு நாள் ஒரு இளம் பெண் தன் பாட்டியின் கைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், திடீரென்று அவள் பாட்டியின் திருமண மோதிரத்தை பரிசோதிக்க நின்றாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, மோதிரம் ஏன் இவ்வளவு பெரியதாகவும் கனமாகவும் இருக்கிறது என்று அவள் பாட்டியிடம் கேட்டாள். அவள் பார்த்த மெல்லிய மிகவும் மென்மையான மோதிரங்கள் போல் எதுவும் இல்லை. பாட்டி சிரித்துக்கொண்டே சொன்னார், “ஏனென்றால் எனக்கு திருமணம் ஆனபோது, மோதிரங்கள் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் செய்யப்பட்டது.”
பல தம்பதிகள் திருமணத்தை ஒரு ஒப்பந்தமாக பார்ப்பதே அவர்கள் தங்களது திருமண மோதிரத்தை கழட்டுவதற்க்கான ஒரு காரணம். ஒப்பந்தம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையிலான நிபந்தனை, இது அனைத்து தரப்பினரும் செய்வார்கள் என்பதைக் குறிக்கிறது. ஒப்பந்தங்கள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு செய்யப்படுகின்றன, மேலும் அவை "என்றால், பின்னர்" அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. “அவர்கள் இதைச் செய்தால், நான் அதைச் செய்வேன்.” மக்கள் ஒப்பந்தங்களில் நுழைகிறார்கள், ஏனெனில் அவர்கள் வரும்புவதை அதில் பெறவே. அவர்கள் விரும்புவதை அவர்கள் மேலும் பெறாதபோது, அல்லது சிறந்த தோற்றமுடைய விருப்பத்தை அவர்கள் கண்டறிந்தால், அவர்கள் அந்த ஒப்பந்தத்தை முறித்துப்போடுவதை நியாயப்படுத்துவார்கள்.
இருப்பினும், வேதாகமம் திருமணத்தை இவ்வாறு விவரிக்கவில்லை, ஆனால் அதை ஒரு உடன்படிக்கையாக வரையறுக்கிறது. ஒரு உடன்படிக்கை என்பது தெய்வீகமாக உருவாக்கப்பட்ட பிணைப்பாகும், அதாவது அது நிரந்தரமானது. அதற்கு விதிகள், பொறுப்புகள் மற்றும் நன்மைகள் உள்ளன. உடன்படிக்கைகள் என்பது நெருக்கமான உறவுக்காக, மற்றவரின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஒன்றாகும். அதில், தனிநபரின் தேவைகளை விட உறவின் நன்மையே முதன்மை பெறுகிறது. இதனால்தான் உடன்படிக்கைகள் நிபந்தனையற்ற வாக்குறுதிகளை அளிக்கின்றன. அடிப்படையில், இவைகள் தேவனால் நமது பரிசுத்த வாழ்க்கையில் அதிகாரப்பூர்வமாக்குப்பட்டு நமது இப்பூவுலக வாழ்வில் நாம் கடைபிடித்து வாழ வேண்டிய உடன்படிக்கைகள். எல்லாவற்றிற்கும் மேலாக, திருமண உறுதிமொழிகள் "தேவனுக்கு முன்பாக" செய்யப்படுகின்றன, எனவே தேவன் மற்றும் மனைவியுடன். உங்கள் மனைவியுடனான உடன்படிக்கையை முறிப்பது என்பது தேவனுடன் அதை முறிப்பதாற்கு சமமாகும்.
கணவனும் மனைவியும் ஒப்பந்த விதிமுறைகளுக்குப் பதிலாக உடன்படிக்கைத் திருமணம் செய்துகொண்டால், அவர்கள் ஒரு பாதுகாப்பை பெறுவார்கள். இது ஒரு குடை போன்றது. மழை பெய்யும் போது, குடை மழையை நிறுத்தாது, ஆனால் உங்கள் மீது மழை பெய்யாமல் தடுக்கிறது அல்லவா, அதுபோல.
தேவனின் மறைவின் கீழ் வாழ்வது உங்கள் திருமணத்தில் உள்ள சவால்களை நிறுத்தாது, ஆனால் அந்தச் சவால்களை நீங்கள் அவருடைய மறைவின் கீழ் இருந்தால் மேற்கொள்ளளாம், மேலும் அவை பொதுவாக ஏற்படுத்தும் தாக்கத்தை உங்களுக்கு உண்டாக்காது.
உங்கள் துணையுடன் உடன்படிக்கையின் அடிப்படையில் எவ்வாறு வாழத் தொடங்கலாம்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Kingdom Marriage](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12962%2F1280x720.jpg&w=3840&q=75)
திருமணம் என்பது மிகுந்த சந்தோஷங்களுடனும் பெரும் சவால்களுடனும் வருகிறது. இதற்கு பெரும்பான்மையான காரணம் நமது திருமணத்தின் தேவ சித்தத்தை மறந்ததே. நமது திருமணத்தில் நாம் தேவனை நீக்கிவிட்டு அதை மகிழ்ச்சியின் அடிப்படையில் வரையறுத்துள்ளோம். ஆனால் உண்மை என்னவென்றால், உலகம் முழுவதும் தேவனின் எல்லையை விரிவுபடுத்துவதன் மூலம் அவரை மகிமைப்படுத்த திருமணம் உள்ளது. இந்த ஐந்து நாள் வாசிப்புத் திட்டத்தில், டாக்டர் டோனி எவன்ஸ் உங்களை திருமணம் என்னும் இராஜ்ஜியப் பயணத்திற்குள் அழைத்துச் செல்வார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)