“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!மாதிரி
“உங்களது நன்மைக்கு ஏதுவாகவே அவர் எல்லாவற்றையும் நடப்பிக்கிறார்”
நமது வாழ்வின் எல்லாப்பகுதிகளும், எல்லாமும்தேவனின் கட்டுப்பாட்டில் உள்ளது. விசுவாசிகளாகிய நமக்கு எந்தச் சூழ்நிலையையும் நம் நன்மைக்கேதுவாக மாற்ற தேவன் சத்துவம் உள்ளவர்.
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” – ரோமர் 8:28
நமது வாழ்வின் மிகமோசமான சவால்களையும் கூடக் கையாளுவதற்கு தேவனால் நிச்சயம் முடியும்; நமது வாழ்வின் நோக்கங்களாக அவர் நியமித்தவற்றை நிறவேற்றும் பாதையில் அவர் நம்மை நடத்துவார்.
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” – நீதிமொழிகள் 3:5-6
தேவனிடம் நம்பிக்கை கொள்வதென்பது நமது பொறுப்புகளுக்கோ, உக்கிராணத்துவத்துக்கோ மாற்றானதல்ல.
மாறாக, நமது பொறுப்புணர்வும், தேவனைச் சார்ந்திருப்பதும் ஒன்றுக்கொன்று கைகோர்த்துச் செல்லவேண்டியவை. நாம் நமது பொறுப்புகளை சரியாய் நிறைவேற்றும் போது, தேவன் அவரது பங்கை நிறைவேற்றி நம்மைத் தீர்க்கமாய் நடத்தவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.
அனேக விஷயங்களில், நமது சூழ்நிலைகளின் கதவுகளைத் திறப்பதன் மூலமாகவும், மூடுவதன் மூலமாகவும் தேவனது நடத்துதலை உணரலாம். மற்ற நேரங்களில், நமது சூழ்நிலைகளில், சுகப்படுத்தவோ, அற்புதம் நடப்பிக்கவோ, முடியவே முடியாதென்று தோன்றுகிற பிரச்சினைகளை முடித்துவைக்கவோ தேவனுடைய நேரடித் தெய்வீக இடைபடுதல் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
“இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்”- மத்தேயு 19:26
குணப்படுத்தமுடியாத வியாதிப்படுக்கையில் இருக்கும்போதும், பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும்போதும், நமக்குப் பிரியமானவர்களின் மரணத்தின்போதும் – எந்தக் கடின வேளையிலும், தேவன் நம்மோடிருந்து இயற்கைக்கு மேற்பட்ட விதத்தில் செயல்பட வல்லமையுள்ளவரய் இருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் மூலமாக வேதனையை வெற்றியாகவும், துன்பங்களைத் துதிகளாகவும் மாற்றுவதில் தேவன் ஒரு வல்லுனர். தேவன் இன்றைக்கும் “அற்புதம் செய்யும் பணி” யில்தான் உள்ளார் என்பதை சந்தேகப்படாதீர்கள். எந்தக் கடினமான சூழ்நிலையிலும் இடைப்படுவதற்குத் தேவன் வல்லமையுள்ளவர்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் தனித்திருக்கவில்லை. வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும், நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும் இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2