“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!மாதிரி
“பரிசுத்த ஆவியானவரின் பணி ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானது”
சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்தே, பரிசுத்த ஆவியானவர் இருந்து, எல்லாத்தலைமுறைகளிலும் வாசமாயிருந்திருக்கிறார்.
“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்” – ஆதி. 1:2
ஆனால், இயேசு தமது பணியைச் சிலுவையில் ஆற்றி முடிக்குமளவும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு ஒவ்வொரு விசுவாசிக்கும் தனித்தனியாக கிடைக்கவில்லை. தாம் இறக்கும்முன்னர், இயேசு தம் சீடர்களிடம் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மத்தியில் இருந்தாலும், அவர்களில் வாசமாயிருக்கவில்லை என்று சொன்னார்.
“உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்”- யோவான்14: 17-18.
தாம் மரித்தபின்பும் ஆவிக்குரிய ரீதியில், அவர்கள் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மூலமாக, இயேசு வாழ்வதாக தமது மரணத்துக்கு முன்னர் தம் சீடர்களுக்கு ஆறுதலின் வாக்குத்தத்தம் கொடுத்தார். இயேசு நம் வாழ்வில் தொடங்கிய கிரியை பரிசுத்த ஆவியானவர் மூலமாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. நம் வாழ்வில் கீழ்க்கண்ட நான்கு காரியங்கள் நடைபெறும்படியாகத் தேவன் பரிசுத்த ஆவியானவரைப் பயன்படுத்துகிறார்:
1. அவர் இரட்சிப்பை ஒவ்வொருவரின் தனிப்பட்ட உண்மை அனுபவமாக மாற்றுகிறார்.
2. அவர் வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்படியாக உங்களைப் பெலப்படுத்துகிறார்.
3. அவர் நீங்கள் வளரும்படி உங்களுக்குள் கிறிஸ்தவக் குணநலன்களைக் கட்டியெழுப்புகிறார்.
4. அவர் எல்லாவற்றையும் உங்கள் நன்மைக்கேதுவாக செயல்படுத்துகிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் தனித்திருக்கவில்லை. வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும், நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும் இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2