உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!மாதிரி

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

6 ல் 6 நாள்

“ ஓர் இறுதிச் சிந்தனை”

நீங்கள் இதுவரை இயேசுவை உங்கள் வாழ்வில்   ஏற்றுக்கொள்ளாதிருந்தால் அல்லது ஏற்றுக்கொண்டு பின்னர் அவருக்காக வாழ்வதை   நிறுத்திவிட்டீர்கள் என்றால், இன்றைக்கு ஒரு   சிறு ஜெபத்தை உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுத்து, தேவனோடு ஒரு புதிய உறவைத் தொடங்குங்கள். கீழ்க்காண்பது போல ஜெபிக்கலாம்:

“இயேசுவே, நான்   பாவியென்றும், நீர் ஒருவரே   எனது பாவத்தின் தண்டனையிலிருந்து என்னைத் தப்புவிக்க வல்லவர் எனவும் அறிவேன்.   உம்மை என் வாழ்க்கையில் பிரவேசிக்கும்படியும், எல்லாப்பாவத்திலிருந்தும் என்னைச் சுத்திகரிக்கவும் வேண்டுகிறேன். என்   வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நாளும்   உமக்காகவே வாழ உதவும். என் வாழ்வில் வந்து என்னை விடுவித்ததற்காக உமக்கு நன்றி   சொல்லுகிறேன்!”

நீங்கள் இந்த ஜெபத்தை முழு மனதோடும், இயேசு தாம் வாக்களித்ததை நிச்சயம் செய்துமுடிப்பார் என்ற விசுவாசத்தோடும்   ஏறெடுத்திருப்பீர்கள் என்றால், நீங்கள்   இப்பொழுதே இரட்சிப்பைப் பெற்றுவிட்டீர்கள்; உங்கள் நித்திய வாழ்வை அவருடனே வாழும்படியாக உங்கள் விதியையே மாற்றி   விட்டீர்கள்! வாழ்த்துகள்!

நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவெடுத்து விட்டீர்கள்   என்றால், எங்களுக்குத்   தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்களது புதிய வாழ்க்கைப்   பயணத்தில் உங்களுக்கு உதவும் படியாக, இன்னும் சில தியானங்களை யூவெர்ஷன் வேதாகமச் செயலியிலிருந்து உங்களுக்கு   அனுப்புவோம். கீழ்க்கண்ட லிங்க்’கைத் தெரிவு செய்யவும்.

நான் கிறிஸ்துவைப் பின்பற்றத் தீர்மானித்து விட்டேன்!  

வேதவசனங்கள்

நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய   ஆழமான புரிதலுக்கு ஓர் எளிய வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருப்பீர்களேயானால், இங்கே தொடங்குங்கள். – டேவிட் ஜே. ஸ்வாண்ட்’   எழுதிய  “ இந்த உலகுக்கு வெளியே;   வளர்ச்சிக்கும் இலக்குக்குமான ஒரு கிறிஸ்தவ வழிகாட்டி” 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:http://www.twenty20faith.org/yvdev2