உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!மாதிரி
“தேவன் உங்களைப் பரலோகத்தில் நுழைய அனுமதிக்க வேண்டுமா, என்ன?”
எதிர்பாராமல் உங்களது இவ்வுலக வாழ்வு திடீரென்று முடிவுக்கு வந்து விட்டதென்று ஒரு கணம் கற்பனை செய்து கொள்ளுங்கள்; அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு உங்கள் சிருஷ்டிகரின் முன்னால் நிற்கிறீர்கள். உங்கள் குழப்பமும், ஆச்சரியமும் உங்கள் நித்திய வீட்டைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் பரவசமுமாக மாறி, நித்திய வீட்டுக்குள் நுழையும்போது வாயிலுக்கு முன்பாகத் தடுக்கப்படுகிறீர்கள். உங்களைத் துளைப்பது போன்று ஒரு கேள்வியைத் தேவன் கேட்கிறார் : “ என்ன காரணத்துக்காக உன்னை நான் பரலோகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்?”
அதற்கு நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?
நல்லவேளையாக, நம் ஒவ்வொருவருக்கும் அந்த மகாப்பெரிய, அற்புதமான நாள் வரும்போது, பரலோக வீட்டில் நுழைவதற்கான தேர்வு எதுவும் தேவன் நடத்துவதில்லை. இருந்தாலும், இரட்சிப்பை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள அவசியமான ஒரு சித்திரத்தை இந்தக் கற்பனைக்காட்சி நம் மனதில் பதிக்கிறது.
சிலர், தேவனின் இந்தக் கேள்விக்குப் பதிலாகத் தாங்கள் செய்த நற்கிரியைகளைச் சொல்லலாம். மற்றவர்கள், தாங்கள் ஆலயத்துக்குக் கிரமமாகச் சென்றதையும், இன்னும் சிலர் தாங்கள் விட்டு விலகிய தீமையான காரியங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அவசியமான அம்சங்களாக இருந்தாலும், இவைகள் உங்களது இரட்சிப்புக்கான உத்தரவாதமாகாது. இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு சரியான பதில்தான் உண்டு.
அது, “இயேசு கிறிஸ்துவை என் வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்; அவர் எனது எல்லாப்பாவங்களையும் கழுவி என்னைச் சுத்திகரித்துள்ளார்” என்பதே..
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய ஆழமான புரிதலுக்கு ஓர் எளிய வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருப்பீர்களேயானால், இங்கே தொடங்குங்கள். – டேவிட் ஜே. ஸ்வாண்ட்’ எழுதிய “ இந்த உலகுக்கு வெளியே; வளர்ச்சிக்கும் இலக்குக்குமான ஒரு கிறிஸ்தவ வழிகாட்டி”
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:http://www.twenty20faith.org/yvdev2