பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

நான் வேலை செய்யும் பெண்களின் நீண்ட வரிசையில் இருந்து வருகிறேன், நான் விரும்பும் வேலையைச் செய்வதன் மூலம், என் மகளும் தனது கனவுகளைத் தொடர்ந்து செல்லவும், கடினமாக உழைக்கவும், தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படியவும் கற்றுக்கொள்ளுவள் என்று பிரார்த்திக்கிறேன். புனித உழைப்பு என்பது நமக்கு வழங்கப்பட்ட வேலையைத் தழுவுதலே, ஆனாலும் அதைச் செய்ய நம்மை உருவாக்கியவரிடமிருந்து நமது மதிப்பைக் கண்டுபிடிப்பதும் சேரும் என்பதை அவள் என்னிடமிருந்து கற்றுக்கொள்வாள் என்றும் நான் பிரார்த்திக்கிறேன். நமது வேலைக்கு மதிப்பு இருக்கிறது, தேவனுக்கும், நம் அயலவர்களுக்கும், நமது குடும்பங்களுக்கும் சேவை செய்ய நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் தான் - ஆனாலும் அது நம்மை யார் என்று வரையறுக்காது.
வேலையின் மதிப்பு பறறி வேதத்தில் கொஞ்சம் சொல்லப்பட்டிருக்கிறது:
தேவன் தம் பிள்ளைகளுக்காக நற்செயல்களைத் தயாரித்துள்ளார், அவற்றைச் செய்ய நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டலுடன் பவுல் எபேசியர்களுக்கு எழுதினார் (எபேசியர் 2:10).
பவுலின் இன்னொரு கடிதத்தில், அவர் கொரிந்தியர்களை உறுதியுடன் இருக்கும்படி ஊக்குவித்தார், சிறந்து விளங்கும்படிச் சொன்னார், தேவனுக்காக செய்யப்படும் வேலை வீணாக செய்யப்படவில்லை என்பதை அறிந்திருந்தார் (1 கொரிந்தியர் 15:58).
நீதிமொழிகள் 31ல் புத்தியுள்ள பெண் விருப்பமுள்ள கைகளால் வேலை செய்தாள்; அவள் சம்பாதித்ததில் இருந்து நிலத்தை வாங்கி விற்றாள்; உருவாக்கினாள்; நட்டாள்; நிர்வகித்தாள் (நீதிமொழிகள் 31: 10-31).
தெபோராள் ஒரு நீதிபதியாக பணியாற்றினார் மற்றும் நடைமுறையில் ஒரு இராணுவத் தளபதி போலவே இருந்தார் (நீதிபதிகள் 4-5).
உங்களது வேலையைப் பற்றி நல்ல மற்றும் கெட்ட உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் பணிகளைப் பற்றி உங்கள் உள்ளம் என்ன சொல்கிறது? உங்கள் வேலைக்கு மதிப்பு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா, அல்லது மற்றவர்களின் வேலைகள், பொறுப்புகள் மற்றும் பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது இது “பெரிய விஷயமல்ல” என்று கருதுகிறீர்களா? உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தேவைப்படும்போது கணினியைப் பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா, அல்லது உங்கள் குடும்பத்தினருடனான நேரத்தை இழக்கிறீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா? பொதுவாகப் பேசுகிறேன், உங்கள் வேலையைப் பற்றி நன்றாகவோ, கெட்டதாகவோ, குற்ற மனதுடனோ அல்லது அலட்சியமாகவோ உணர்கிறீர்களா?
நாம் செய்யும் வேலையை தேவனின் மகிமைக்காகவும் மகிழ்ச்சியான இதயத்துடனும் செய்யும்போது அது மதிப்புக்குரியது. அவர் நம்மை அவருடைய வேலைக்கு அழைக்கும்போது, அது எங்கிருந்தாலும், அது எப்படித் தோன்றினாலும், ஏனென்றால் அது நமக்கான அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாகும், அவருக்கு சேவை செய்வதற்கும், நம் அண்டை வீட்டாரை நேசிப்பதற்கும் அவர் நம்மை எவ்வாறு படைத்தார் என்பதன் ஒரு பகுதியாகும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பது

அமைதியின்மை

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
