பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

ரூத்தின் கதையை நான் இதற்கு முன்பு டஜன் (பன்னிரெண்டு) கணக்கான முறை வேதத்தில் படித்திருப்பேன், ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராத ஒன்றை நான் கவனித்தேன். ரூத் ஏனோதானோ என்று ஒரு காரியத்தை செய்யவில்லை. அவள் உழைத்தாள். அவள் கடினமாக உழைத்தாள், மரியாதையுடன், தேவைப்படும்போது ஓய்வெடுத்தாள், தனக்கு முன்னால் இருந்த வேலையை முடித்தாள். அவள் மாலை வரை வேலை செய்தாள், தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக 26 காற்படி பார்லியை சேகரித்தாள். ரூத் அவளுடைய வேலையை செவ்வனே செய்தாள், தேவனோ, இயேசுவின் வம்சவரலாற்றில் அவளுக்கு இடமளிக்கும் ஒரு திட்டத்தை போவாஸுடனான அவளுடைய திருமணத்தின் மூலம் வகுத்திருந்தார்.
அதுவே பரிசுத்த உழைப்பு. ரூத் புகழ் அல்லது அங்கீகாரம் பெற வேண்டும் என்று அவ்வாறு உழைக்கவில்லை. கோதுமை சேகரிப்பது கடுமையான, மற்றும் முதுகு முறியும் வேலை. அது ஆடம்பரமான அல்லது புகழ்பெற்ற அல்லது சுவாரசியமான வேலை இல்லை. அது தன்னை தாழ்த்துவதாக இருந்தது. ரூத்தின் வேலையில் அர்த்தம் மற்றும் நோக்கம் இருந்தது, மற்றும் நானும் நம்முடைய வேலைக்கும் அதேபோல் நோக்கம் மற்றும் அர்த்தம் இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒருவேளை ரூத் தன் மாமி நகோமியுடன் பகிர்ந்து கொண்ட தன் சிறிய வீட்டை சுற்றி பார்த்து அவர் இந்த வீட்டிற்கு என்ன வழங்க முடியும் என சிந்தித்ததற்கு மாறாக, அவர்களிடம் இது இல்லை அது இல்லை என கவலைக் கொண்டிருந்தால் என்னவாயிருக்கும்? ரூத் தனக்கேற்ற வேலையைத் தேடிக்கொண்டிருந்ததால், தேவன் அவளைக்கொண்டு விரும்பியதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் என்னவாயிருக்கும்? அவள் அறுவடை முழுவதையும் தவறவிட்டிருக்கலாம், அதே போல் அவர் குடும்பத்தை மீட்கும் வாய்ப்பையும் தேவன் அவளுக்கு கொடுத்த எல்லா ஆசிர்வதத்தையும் தவரவிட்டிருக்கக்கூடும்.
ஒருவேளை தேவன் அழைத்த அழைப்பானது வெளியே இறங்கி சென்று உழைக்க கடினமாக இருக்கலாம். தேவனை மகிப்படுத்தாத ஒரு பணியிடத்தில் பணியாற்ற உங்களுக்கு இடம் கிடைத்திருக்கலாம், அதனால் நீங்கள் ஒரு வெளிநாட்டு நிலத்தில் அந்நியர் போல் உணரலாம். அல்லது ஒருவேளை தேவன் உங்களை ஒரு புதிய இடத்திற்கு கொண்டு வந்து, அங்கீகாரம் மற்றும் புகழ் ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கான உங்கள் கனவுகளை மிகவும் சிறிய முறையில் சேவை செய்ய ஒரு அழைப்புடன் மாற்றப்பட்டிருக்கலாம். ஒருவேளை நீங்கள் நேசிக்கும் ஒரு வேலையில் உண்மையாக பணியாற்றி வருகிறீர்கள், ஆனால் உங்கள் வேலையின் பலனை நீங்கள் பார்க்காத விரக்தியை உணருக்கிறவர்களாக இருக்கலாம்.
நாம் போராடுவதை நிறுத்திவிட்டு சேவை செய்ய தொடங்கும் போது, நாம் உண்மையாக நடவு செய்ததை அறுவடை செய்ய தேவனை விசுவசிக்கிறோம். உங்கள் பணியிடத்தில் நீங்கள் காட்டும் இரக்கம், அங்கு இருக்கும் யாரோ ஒருவரை தேவனுக்கு நெருக்கமாக ஈர்க்கும் விஷயமாக மாறும். சிறிய, காணாத, விசுவாசமுள்ள இடங்களில் மற்றவர்களுக்கு நீங்கள் காண்பிக்கும் அன்பு அவர்கள் தேவனிடத்தில் நெருகுவதற்கான முதல் படிகட்டுகளாக இருக்கலாம். நீங்கள் விதைக்கும் அந்த விசுவாசத்தின் விதை ஒரு நாள், நீங்கள் இந்த பூமியில் இருந்து சென்ற பிறகும் தலைமுறைகளுக்கு, தேவன் உலகுடன் பகிர்ந்து கொள்ள விரும்பு் ஒரு அழகான பரிசுக்கு வினையூக்கியாக விளங்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பது

அமைதியின்மை

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
