ஒப்பீட்டிலிருந்து விடுபடுங்கள் அன்னா லைட்டின் 7 நாள் வாசிப்பு திட்டம்மாதிரி
நீங்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஒருவேளை நீங்கள் தொடர்ச்சியான ஒப்பிடுதலினால் உண்டாகிற பாரத்தின் கீழ் போராடிக்கொண்டிருக்கலாம், உங்கள் மனதில் நீங்கள் வைத்திருக்கும் சாத்தியமற்ற நிலையை எப்போதும் எட்ட முடியாமல் இருக்கலாம். எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்கிற நிரந்தரமான உங்கள் தேவையின் காரணமாக ஒருவேளை நீங்கள் நட்பை இழந்திருக்கலாம் அல்லது உங்கள் உறவுகளின் நெருக்கத்தை இழந்திருக்கலாம் ஏனெனில் உண்மையான மற்றும் எழுச்சியூட்டும் நண்பராக இருப்பதற்கான உங்கள் திறனைத் ஒப்பீடு திருடி விட்டிருக்கலாம்.
அல்லது நீங்கள் சோர்வடைந்து இருக்கலாம்.
ஒப்பிடுதலின் காரணமாக உங்கள் மனதை கவலை, சந்தேகம், மனச்சோர்வு, மற்றும் கோபம் ஆகியவற்றால் நிரப்பும் வாழ்க்கையின் தொடர்ச்சியான தடையினால் சோர்வடைந்து இருக்கலாம்.
“என்னால் தொடர முடியாது!” என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறது, நீங்கள் எதைச் சாதித்தீர்கள், உங்கள் புகழ், செல்வாக்கு மற்றும் விருப்பங்களுக்காக அல்லாமல் நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதற்காகவே நேசிக்கப்படக்கூடிய அமைதியான இடத்திற்காக, ஒரு ஒளிமறைவும் இல்லாமல் நேசிக்கப்பட நீங்கள் ஏங்குகிறீர்கள்.
எனக்குத் தெரியும், ஏனென்றால் அது நான்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் வெற்றிக் கொள்ள விரும்பும் சில விஷயங்களுக்காக, மூன்று நாள் தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருந்து ஜெபம் செய்ய முடிவு செய்தேன். சில பிரார்த்தனைகளை குறிப்பு சீட்டுகளில் எழுதி, எனது அலமாரியில் ஒரு சுவரில் ஒட்டி வைத்துக்கொண்டேன். நான் அதிகாலையில் எழுந்து, ஆண்டவருடைய சந்நிதியில் இந்த குறிப்புகளின் மீது ஜெபிப்பதில் கூடுதல் நேரத்தை செலவிட... சுமார் மூன்று நாட்களுக்கு நன்றாக முடிந்தது. எனது உபவாசம் முடிந்தவுடனேயே, எனது கூடுதல் பிரார்த்தனை நேரமும் முடிவடைந்து விட்டது போல் தோன்றியது. எது முடிவடையவில்லையென்றால் அவருடைய காலடியில் நான் சமர்ப்பித்த அந்த குறிப்பிட்ட பிரார்த்தனைகளின் மூலம் என் வாழ்க்கையில் கிரியை செய்யும் ஆண்டவரின் வல்லமை.
ஒரு குறிப்பிட்ட ஜெபம் இதுவாக இருந்தது: "ஒப்பிடுவதில் இருந்து விடுபட எனக்கு உதவும்!" நான் மனச்சோர்வடைந்து, புலப்படாத பாரத்தால் மேற்கொள்ளப்பட்டு, மற்றவர்களைப் பற்றிய எனது மதிப்பீடுகளால் மனக்கண் குருடாக்கப்பட்டதாக உணர்ந்தேன். சமூக ஊடகங்களில் என்னைத் தாழ்வாக உணரச் செய்தவர்களை நான் பின்தொடர்வதை நிறுத்தினேன். என்னைப் பொறாமை கொள்ளச் செய்தவர்களைப் பற்றி எதிர்மறையாகப் பேசினேன், தங்கள் வாழ்க்கையில் பெரிய சாதனைகளைச் செய்தவர்களுடன் ஒருபோதும் கொண்டாடவில்லை. எனக்கு இருந்த ஒரே நிம்மதி தனிமைதான். என்னோடு ஒப்பிடுவதற்கு ஒருவரும் இல்லாதபோது, நான் பாதுகாப்பாக இருந்தேன். ஆனால் தனிமை வந்து என் உலகத்தை சிறியதாகவும், என் மனதை மிக சிறியதாகவும் ஆக்கி விட்டது. எனக்கு விடுபட ஒரு வழி வேண்டும்!
பின்வரும் வாசிப்புத் திட்டத்தை கிருபாசனத்திலிருந்து நேரிட்டு வந்த விடையாக நான் உணர்கிறேன். அடுத்த வரும் 7 நாட்களில் நாம் ஆராயப்போகிறோம் இதுபோன்ற கேள்விகளை:
ஒப்பீடு என்றால் என்ன?
நாம் ஒப்பிடும்போது என்ன நடக்கிறது?
ஒப்பீட்டை நாம் எவ்வாறு மேற்கொள்வது?
விடுதலைக்கான எனது தேடுதலின் ஜெபத்திற்கு நேரிடையாக ஆண்டவரிடமிருந்து கொடுக்கப்பட்ட இந்த எண்ணங்களின் மூலம், நீங்களும் ஒப்பீட்டு கண்ணியில் இருந்து விடுதலை பெற்று அவர் உங்களுக்காக திட்டமிட்டிருக்கிற அபரிதமான மற்றும் முழுமையான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆண்டவரே, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் போதுமானதாக இல்லை, போதுமானதைச் செய்யவில்லை, போதுமான அளவு சாதிக்கவில்லை என்று நான் எப்போதும் எண்ணுவதால் சோர்வடைகிறேன். என்னைச் சுற்றியுள்ள உலகம் என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க பல வாய்ப்புகளைத் எனக்கு தருகிறது, அது ஆரோக்கியமானதல்ல என்று எனக்குத் தெரியும். இதிலிருந்து நான் விடுபட முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் இதை உமது பாதத்தில் வைக்க எனக்கு உதவும். என்னுடைய முழு ஆற்றலிலிருந்து பின்னோக்கமடையாமல் நீர் சிருஷ்டித்த அந்த நபராக நான் இருக்க விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில்.
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை விட அபரிமிதமான ஒரு வாழ்வை ஆண்டவர் உங்களுக்கு தருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் சோகமான உண்மை என்னவென்றால், ஒப்பீடு உங்களை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது. இந்த வாசிப்புத் திட்டத்தில், அன்னா லைட் வெளிப்படுத்துகிற ஆழ்ந்த அறிவு, ஒப்பிடுதல் உங்கள் செயல்திறன்களின் மீது இடுகின்ற தடைகளை உடைத்து, ஆண்டவர் உங்களுக்காக அமைத்திருக்கிற சுதந்திரமும் அபரிமிதமுமான வாழ்க்கையை வாழ உதவும்
More