உணர்ச்சி முழுமைக்கான ஏழு குறிப்புகள்மாதிரி
குறிப்பு 1: உங்கள் இதயத்தை கிறிஸ்துவுக்குக் கொடுங்கள்
ஆவிக்குரிய மீட்பு என்பது நேர்மறையான சுய-பிம்பத்தை வளர்த்துக்கொள்வதற்கான முதல் திறவுகோலாகும். கிறிஸ்துவை அறியாதவர்கள் தங்களை தாங்களே உலகம் என்று நினைக்கிறார்கள் என்று கூறலாம், ஆனால் அவர்கள் நேர்மையாக இருக்கிறார்கள் என்றால், அந்த முடிவுக்கு வர மாட்டார்கள். கிறிஸ்துவை மறுக்கும் பலர் தாங்கள் தன்னிறைவைப் பெற்று வாழ்கிறோம் என்று கூறினாலும், அவர்கள் துன்பபடுகிறவர்களாவும், சிரமபடுகிறவர்களாவும் இருக்கின்றார்கள். அவர்கள் வலுவான வேர் அமைப்பு இல்லாத அழகான மலர்களைப் போலவே உள்ளனர். அவர்கள் தங்களது சக்தி, ஆற்றல், உற்சாகம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் மட்டுமே நம்பிக்கை வைக்கிறார்கள். இறுதியில், அவர்கள் தங்கள் முடிவை அடைகிறார்கள். சிட்ச்சிக்கப்படும் காலங்களில் கூட, ஆறுதல் மற்றும் சத்தியத்தின் அடிப்படையில் அவர்களை கிறிஸ்துவில் கட்டியெழுப்ப அவர்களுக்குள் பரிசுத்த ஆவி இல்லை.
இயேசு கிறிஸ்துவுடன் ஒரு உறவைக் கொண்டிருப்பது உணர்ச்சிபூர்வமான முழுமையைக் கெடுக்கின்ற பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது:
· குற்ற உணர்வு. மன்னிக்கப்படாத பாவம் உங்களிடம் இருக்கும்போது குற்ற உணர்வை உருவாக்குகிறது. நீங்கள் தேவனின் மன்னிப்பை கேட்கும்போது, நீங்கள் மன்னிக்கப்படுகிறீர்கள். குற்ற உணர்வு கழுவப்படுகிறது (ரோமர் 8:1).
· அன்பு இல்லாதது போன்ற உணர்வு. நீங்கள் கிறிஸ்துவை நோக்கி திரும்பும்போது, தேவன் உங்களை நேசிக்கிறார் என்றும் அவர் உங்களுடன் நித்திய உறவைப் பெற விரும்புகிறார் என்றும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் (ரோமர் 8:38-39).
· மற்றவர்களுக்கு எதிரான பழிவாங்கும் மனப்பான்மை. தேவனின் இலவச இரட்சிப்பின் பரிசை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன், கடவுளும் மற்றவர்களை மன்னிக்க விரும்புகிறார் என்பதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். தேவன் உங்களுக்காகச் செய்ததை, எல்லா மக்களுக்கும் அவர்கள் கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல் செய்ய விரும்புகிறார் (கொலோசெயர் 3:13).
· தேவனிடம் தயவை பெறுவதற்காக முயற்சித்தல். தேவனின் இரட்சிப்பு உங்களுக்கு இலவசமானது. அதை நீங்கள் சம்பாதிக்கவோ, வாங்கவோ அல்லது நல்ல செயல்களால் அடையவோ முடியாது. அதற்கு நீங்கள் தகுதியற்றவர். நீங்கள் ஆவிக்குரியபடி புதிதாகப் பிறக்கும்போது, நீங்கள் தேவனிடம் பெறும் அனுகுலங்கள் முழுவதும் கிறிஸ்து செய்ததை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஏற்க வேண்டும் (எபேசியர் 2:8-9).
நீங்கள் இன்று உணர்ச்சி ரீதியாக முழுமையடைய விரும்பினால், உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்குக் கொடுங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன், அவரை உங்கள் ஆண்டவராக பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவின் இந்த தினசரி பின்பற்றுதலில் பாவங்களை ஒப்புக்கொள்வது, தினசரி குளியல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று ஆன்மீக ஆரோக்கியத்திற்கு உங்கள் ஆவியின் தினசரி சுத்திகரிப்பும் உள்ளடங்கும். முதலில் உங்கள் பாவ இயல்பிற்காகவும், அதன் பிறகு கிறிஸ்துவைப் பின்பற்றும் போது நீங்கள் செய்யும் பாவங்களுக்காகவும் தேவனின் மன்னிப்பை நாடவேண்டும்.
அனைவரும் கிறிஸ்துவை முழுமையாக பின்பற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தற்செயலான மற்றும் அப்பாவித்தனமான பிழைகளுக்கு ஆளாகிறார்கள் – சிலர் இதை செய்யும் பாவங்கள் என்றும் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பாவங்கள் என்று அழைக்கின்றனர். இந்த பாவங்களுக்காகவே நீங்கள் தொடர்ந்து மன்னிப்பை நாடுகிறீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அன்பான பரலோகத் தகப்பன் தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் உங்களுக்கு வழங்குவதாக வாக்களிக்கிறார் (எபேசியர் 1:7).
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் உங்கள் உணர்ச்சி வாழ்க்கையில் கடவுளின் சிறந்ததை அடைவதில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளன. இவைகளை வரிசையாக செய்ய வேண்டியதில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லி உங்கள் ஆவி மற்றும் உணர்ச்சிகளில் முழுமையை அடைய உதவும் முக்கிய பழக்கங்களை உருவாக்க உதவுகிறார். இதுபோன்ற மேலும் பல வாசிப்பு திட்டங்களை intouch.org/plans இல் காணலாம்.
More