இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி
இரண்டாவது வார்த்தை பிலேயோ (Philia or Phileo). இது தோழமையைக் குறிக்கும் அன்பு. இது நண்பர்களின் மத்தியில் காணப்படக்கூடியது. இது பரஸ்பர, கொடுக்கல், வாங்கல் உறவின் அடிப்படையில் அமைகிறது. சில சமயத்தில் பெற்றோர் பிள்ளைகள் இடையேயும் இந்த அன்பு வெளிப்படுத்தப்படுகிறது. அப்போது அதில் நட்பு, சிநேகம், பற்றுதல், பாசம் காணப்படுகிறது. Philio என்ற மூல வார்த்தையிலிருந்துதான் Philadelphia (பிலதெல்பியா) என்ற வார்த்தை வருகிறது. பிலதெல்பியா என்பதற்கு “சகோதர சிநேகமுள்ள பட்டணம்” என்று அர்த்தமாகும். Philanthropy என்ற ஆங்கில வார்த்தையின் மூல வார்த்தையும் Philia தான். அதற்கு அர்த்தம் மனித அன்பு என்பதாகும்.
முதிர்ச்சியற்ற அன்பு, “அன்பு கூர்ந்தால் அன்பு கூர்வேன்” என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்கிறது. ஆனால் முதிர்ச்சியடைந்த அன்பு, “நான் அன்பு கூருவதால் அன்பு கூரப்படுகிறேன்” என்கிற சித்தாந்தத்தை பின்பற்றுகிறது. “நீ எனக்குத் தேவை, எனவே உன்னை நேசிக்கிறேன்” என்று முதிர்ச்சியில்லாத அன்பு கூறுகிறது. முதிர்ச்சியடைந்த அன்போ, “நான் உன்னை நேசிக்கிறேன், எனவே நீ எனக்குத் தேவை” என்று சொல்லுகிறது.
Dr. Kenneth S. Wuest என்கிற ஒரு பிரபல வேத வல்லுநர் மற்றும் போதகர் Philia வைக் குறித்து இவ்வாறாக கூறுகிறார். Philia என்றால், “நாம் நேசிக்கும் ஒன்றால் (ஒருவரால்) உண்டாகும் இன்பத்தின் விளைவாக இருதயத்தில் இருந்து ஏற்படும் அன்பு”. நமக்கு அறிமுகமான நபர்களிடம் இப்படிப்பட்ட அன்பை நாம் உணருகிறோம். பாசம் எப்போது ஆரம்பிக்கிறது என்பது நமக்கு எல்லா நேரத்திலும் தெரிவதில்லை; பல சமயங்களில், அந்த நபர் நம்மை விட்டுப் போகும்போதுதான் அவர் மீது நாம் கொண்டுள்ள பாசம் தெரிய ஆரம்பிக்கிறது. Philia என்றால் நமக்கு அறிமுகமான அல்லது பரிச்சயமானவர்கள் மீது ஏற்படும் ஒரு அமைதியான, நல்ல உணர்வாகும். அநேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் கொண்டுள்ள பாசத்தின் நிமித்தம் உண்டாகிறது. ஆனால் இந்த பிலெயோ அன்புக்கும் தெய்வீக உதவி தேவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.