இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி
அன்பைக் குறிக்கும் நான்காவது கிரேக்க வார்த்தை அகாபே (Agapé). அகாபே என்றால் சுயநலமற்ற, தியாகமான அன்பு என்று அர்த்தம். “நாம் நேசிக்கிற ஒன்றின் (ஒருவரின்) விலையேறப் பெற்ற தன்மையால் இந்த அன்பு உள்ளத்திலிருந்து பொங்கி எழுகிறது. ஒன்றை மேன்மையானதாக, உயர்வாக எண்ணி நேசிக்கிற அன்பு இது. பரிசு என்னும் எண்ணமும் இதில் அடங்கியுள்ளது. கிரேக்க மொழியில் அன்பைக் குறிக்கும் மிக உயர்வான, மென்மையான வார்த்தை அகாபே” என்று Dr. Wuest கூறுகிறார்.
இந்த வார்த்தை, தேவன் நம் மீதும், நமக்குள்ளும் வைத்துள்ள அவருடைய அன்பைக் குறிக்கிறது. நாம் மறுபடியும் பிறந்தபோது நமக்குள் வாசம்பண்ணவந்த பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுடைய அன்பு நம்முடைய உள்ளங்களில் ஊற்றப்பட்டது என்று ரோமர் 5:1, 5 வசனங்கள் கூறுகிறது. எனவே விசுவாசிகளாகிய நமக்கு தேவைப்படுவது அதிக அன்பல்ல. நமக்குள்ளே இருக்கும் அன்பை, அன்பே இல்லாத இந்த உலகத்தில் நாம் ஊற்ற வேண்டும் என்கிற அறிவு.
இரட்சிக்கப்படாதவர்கள் யோவான் 13:34, 35 ன் படி வாழ்வது மிகவும் கடினம். இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படாதவர்களை அன்புகூர முடியும். ரோமர் 5:5 ன் படி நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், தேவனுக்குள் இருக்கும் அதே அன்பு உங்களுக்குள் இருக்கிறபடியால், தேவனைப் போலவே நீங்களும் அன்புகூர முடியும்! ஆவியின் கனி அன்பு என்று கலாத்தியர் 5:22, 23 கூறுகிறது.
கனி கிளைகளில் வளருகிறபடியால் கிறிஸ்தவ ஜீவியத்தின் எல்லா பகுதிகளிலும் நீங்கள் முதிர்ச்சியடையவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால், நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது உங்கள் ஆவியிலும் வாழ்விலும் முதலாவது காணப்படும் கனி அன்பு. தேவனோடு ஐக்கியம் கொள்ள, தேவனுடைய மண்டலத்தில் நடக்க, நாம் அன்பில் நடப்பது அவசியம். ஏனென்றால், தேவன் அன்பாகவே இருக்கிறார். இது இயற்கையான மனுஷ அன்பல்ல, மாறாக, தேவனுடைய தெய்வீக அன்பு.
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.