கோபம் மற்றும் வெறுப்புமாதிரி
எல்லா கோபமும் பாவமானது அல்ல. சொல்ல போனால், தேவன் கோபப்படும் காரியங்களை பற்றி கோபப்பட உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்கு பெயர் நீதியான கோபம். சூரியன் அஸ்தமிக்கும் வரை இப்படி இருக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. உங்கள் கோபத்தின் மூல காரணத்தை கண்டறிய உங்கள் இருதயத்தை ஆராய்ந்து அறிய வேண்டும். உங்கள் கோபத்தை மூடி வைத்து கொண்டாலோ அல்லது கோபத்தால் வெடித்து சிதறினாலோ, அவை இரண்டுமே ஆபத்தானவை. உங்களுக்கு ஒருவேளை இது ஏற்கனவே தெரிந்திருக்கும். தவறாக கையாளப்படும் கோபம் உங்களுக்கோ உங்களை சுற்றியுள்ள மற்றவர்களுக்கோ எந்த நன்மையும் கொடுக்காது. உங்கள் கோபத்தை அன்பாய் மாற்ற தேவனுக்கு உங்களை விட்டுகொடுக்கும் நேரம் இது தான்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எல்லாரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கோபத்தை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த 7-நாள் வாசிப்பு திட்டம் அதை பற்றி வேதாகம கண்ணோட்டம் கொடுப்பதோடு, ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்கு ஒரு சிறிய பகுதியையும் கொண்டுள்ளது. கொடுக்கப்பட்ட பகுதியை வாசித்து சிறிது நேரம் நேர்மையாக தற்பரிசோதனை செய்யுங்கள். மேலும் உங்கள் சூழ்நிலையில் தேவ சத்தத்துக்கு செவிகொடுங்கள்.
More
We would like to thank LifeChurch.tv for providing this plan. For more information, please visit: www.lifechurch.tv