எபேசியர் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எபேசு பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் ரோம் நகரத்தில் சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்தே இக்கடிதத்தை எழுதினார். ஆசியா மாகாணத்திலுள்ள விசுவாசிகளை ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவுமே அவர் இதை எழுதினார். நாம் தீய சக்திகளோடு போராடுவதால் நமக்கு ஒரு பெரிய போராட்டம் தற்காலத்தில் இருக்கும் என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இறைவனுடைய நித்தியமான திட்டம், கிறிஸ்துவின் மூலமாகவும் அவருடைய உடலாகிய திருச்சபையின் மூலமாகவும் நிறைவேற்றப்படுகிறது என்பதே இதில் கூறப்படும் முக்கிய விடயமாகும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எபேசியர் முன்னுரை: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்