2 பேதுரு 1:3-4

2 பேதுரு 1:3-4 TRV

அவர் தமது மகிமையினாலும் மேன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார். அழைத்தவரைப்பற்றி எமக்கு இருக்கும் அறிவின் மூலமாக நம்முடைய வாழ்க்கைக்கும் இறைபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் அவருடைய இறைவல்லமை நமக்கு அளித்திருக்கிறது. இப்படி எமக்கு அளிக்கப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே இறைவனுடைய அதிமேன்மையான, உயர்மதிப்புடைய வாக்குறுதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகளின் மூலமாக இந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொண்டு, தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.