கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை. அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும். கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது. அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும். கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை. அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும். கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை. வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும். கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை. கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை. தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை. கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன. அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும். கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது. எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும். கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும். அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும். நீர் உதவினால் நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும். என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும். கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சங்கீத புத்தகம் 19:7-14
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்