லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:46-55

லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:46-55 TAERV

அப்போது மரியாள், “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது. தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது. நான் முக்கியமற்றவள், ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார். இப்போது தொடங்கி, எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர். ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார். அவர் பெயர் மிகத் தூய்மையானது. தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார். தேவனின் கைகள் பலமானவை. செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார். சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார். தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார். நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார். செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார். தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார். அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார். நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:46-55