கர்த்தாவே! நீர் என்னை அறிவீர். என்னை நினைவில் வைத்துள்ளீர். என்னை கவனித்துக்கொள்வீர். ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும். நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர். நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால் என்னை அழித்து விடாதேயும். என்னை நினைத்துப் பாரும். கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும். உமது செய்தி எனக்கு வந்தது. நான் உமது வார்த்தைகளை உண்டேன். உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று. நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன். உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர். நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்? என்று எனக்குப் புரியவில்லை. எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை? அல்லது குணப்படுத்த முடியவில்லை? என்பது எனக்குப் புரியவில்லை. கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன். நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர். நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
வாசிக்கவும் எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15:15-18
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்