எனவே, நான் அந்த இறைதூதனிடம் போய், அந்தச் சிறிய புத்தகச் சுருளை எனக்குத் தரும்படி அவனிடம் கேட்டேன். அவன் என்னிடம், “நீ இதை எடுத்து உண்பாயாக. இது உன் வயிற்றில் கசப்பை ஏற்படுத்தும். ஆனால் உன் வாய்க்கு இது தேன் போல் இனிமையாயிருக்கும்” என்றான். நான் அந்த இறைதூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறிய புத்தகச் சுருளை எடுத்து, அதை உண்டேன். அது என் வாய்க்கு, தேன் போல் இனிமையான சுவையைக் கொடுத்தது. ஆனால் அதை நான் உண்டு முடித்த போதோ, அது என்னுடைய வயிற்றில் கசப்பை ஏற்படுத்தியது.