எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் அவன் தங்கிவிட்டு செசரியாவுக்குச் சென்றான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, நீதி ஆசனத்தில் அமர்ந்து பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து வந்திருந்த யூதர்கள் அவனைச் சுற்றி நின்றார்கள். அவர்கள் அவன்மீது மிகக் கடுமையான அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை.