1
2 தீமோத்தேயு 4:7
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
போராட்டத்தை நான் நன்றாகப் போராடினேன். ஓட்டத்தை ஓடி முடித்தேன். நான் விசுவாசத்தை பேணிக் காத்துக்கொண்டேன்.
ஒப்பீடு
2 தீமோத்தேயு 4:7 ஆராயுங்கள்
2
2 தீமோத்தேயு 4:2
வார்த்தையைப் பிரசங்கம் பண்ணு. வாய்ப்பு உள்ள காலத்திலும் சரி, இல்லாத காலத்திலும் சரி; அதற்கு ஆயத்தமாய் இரு. தவறை உணர்த்து, கண்டனம் செய், ஊக்கப்படுத்து. இதை மிகுந்த பொறுமையுடன், கவனமான அறிவுறுத்தலின் ஊடாகச் செய்.
2 தீமோத்தேயு 4:2 ஆராயுங்கள்
3
2 தீமோத்தேயு 4:3-4
ஏனெனில் மக்கள் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத காலம் வரும். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் ஆசைகளுக்கிணங்க தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைச் சொல்கின்ற அநேக ஆசிரியர்களைத் தங்களுக்கென்று சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் சத்தியத்தை கேட்பதிலிருந்து விலகி, கட்டுக்கதைகளையே காதுகொடுத்துக் கேட்பார்கள்.
2 தீமோத்தேயு 4:3-4 ஆராயுங்கள்
4
2 தீமோத்தேயு 4:5
ஆனால் நீயோ எல்லா சூழ்நிலைகளிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. கஷ்டங்களைத் தாங்கிக்கொள். நற்செய்தி ஊழியனுக்குரிய பணியைச் செய். உனது ஊழியத்தின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்று.
2 தீமோத்தேயு 4:5 ஆராயுங்கள்
5
2 தீமோத்தேயு 4:8
இப்போது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நீதிபதியாகிய ஆண்டவர், தாம் திரும்பி வரும் நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார். எனக்கு மட்டுமன்றி, அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற எல்லோருக்கும் தருவார்.
2 தீமோத்தேயு 4:8 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்