2 தீமோத்தேயு 3இலிருந்து பிரபலமான வேதாகம வசனங்கள்

ஆனாலும் கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் வரவிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள். ஏனென்றால், மக்கள் தங்களில் மாத்திரமே அன்பு காட்டுகின்றவர்களாகவும், பண ஆசை உள்ளவர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், பெருமை உள்ளவர்களாகவும், பழித்துப் பேசுகின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும், அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மை அற்றவர்களாகவும், அவதூறு பேசுகின்றவர்களாகவும், சுயகட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும், துரோகிகளாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், தலைக்கனம் பிடித்தவர்களாகவும், இறைவனை நேசிக்காமல் சிற்றின்பங்களை விரும்புகின்றவர்களாகவும், தோற்றத்தில் இறைபக்தி உள்ளவர்களைப் போல் காட்டிக்கொண்டாலும் அதன் வல்லமையை மறுதலிக்கின்றவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகியிரு.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 தீமோத்தேயு 3