YouVersion Logo
Search Icon

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்Sample

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

DAY 4 OF 5

நமது கேடகமும் உதவியும்

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாய் இருக்கிறார். என் இருதயம் அவரை நம்பியிருந்தது. நான் சகாயம் பெற்றேன். - சங்கீதம் 28:7

இயேசுவில் அன்புகூர்ந்து அவரைப் பின்பற்றுகின்ற ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக, தனது தொழில் அணுகுமுறைகளில், இயேசுவை அறிந்திருத்தல் என்பது அநேக வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று மேரி கூறுகிறாள். ஒரு தடவை, ஒரு பெண் வன்முறையில் ஈடுபட்டு தன்னைத் தானே கத்திகளால் தாக்குகிறாள் என்று தெரிவிக்கப்பட்ட ஒரு அவசர அழைப்பிற்கு மேரி அனுப்பப்பட்டபோது, அப் பெண்ணின் வீட்டிற்குச் செல்லும் வழியில் அப் பெண்ணுக்காக மிகவும் ஊக்கத்துடன் மேரி ஜெபித்தாள். அங்கு சென்றடைந்தபோது, “அப் பெண் நன்றாக இருந்ததை” மேரி கண்டுகொண்டாள். தேவன் அச் சூழ்நிலையை மாற்றியதைக் கண்ணுற்றபோது “அவர் எனக்காக இருக்கிறார் என்ற தைரியத்தை அது எனக்குக் கொடுத்தது” என்று மேரி பதிலளித்தார். “அவரே என் பாதுகாவலர் மற்றும் கேடகம் மற்றும் என்னோடு கூட இருக்கிறவர் (இருப்பார்)”.

“கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாய் இருக்கிறார். என் இருதயம் அவரை நம்பியிருந்தது. நான் சகாயம் பெற்றேன்” (சங்கீதம் 28:7). இவ்விதமாக தனது உதவிக்கும் நம்பிக்கைக்கும் தேவனை நம்பியிருந்த தாவீது ராஜாவின் உதாரணத்தை மேரி பின்பற்றினாள். இவ்வசனங்களை எழுதுகையில் தாவீது எந்த சோதனையைத் தாங்கிக்கொண்டார் என்பது நமக்குச் சொல்லப்படவில்லை. அவர் சவுல் இராஜாவிடமிருந்து தப்பியோடினாரா அல்லது தனது சொந்த மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடினாரா தெரியாது. ஆனால், அவர் தேவனுடைய இரக்கத்துக்காக அழுந்தார் என்பதை நாம் அறிவோம் (வசனம் 6). தேவனே “தமது மக்களின் பெலன்” என்றும், தம்மில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் பாதுகாப்பான ஒரு இடத்தையும், இரட்சிப்பையும் அருளுகிறார் என்பதையும் அவர் அறிந்திருந்தார் (வசனம் 8).

அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளுக்கு நாம் முகம்கொடுக்கும்போது, நாமும் தேவன்மீது நமது நம்பிக்கையை வைக்கமுடியும். நம்மை என்றென்றும் தூக்கிச்சுமக்கும் நமது மேய்ப்பராக அவர் நமக்கு இருக்கிறார் என்பதை நாம் அறிவோம் (வசனம் 9). நாம் அவரைப் பின்பற்றுகையில் நாம் வழிதவறிச் செல்ல அவர் விடவேமாட்டார் - அமி பௌச்சர் பை

பிரதிபலிப்பு: தேவன்மீது உங்கள் நம்பிக்கையை வைப்பது என்பது, உங்கள் அனுதின வாழ்வையும் அதன் சவால்களையும் நீங்கள் அணுகுகின்ற விதத்தை எப்படி மாற்றுகிறது? உதவி மற்றும் நம்பிக்கைக்காக உங்களால் எப்படி தேவனை நோக்கிப் பார்க்கமுடியும்?

ஜெபம்: அன்பின் தேவனே, எனது நல்ல மேய்ப்பரே, அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னை நடத்தி, எனக்குப் புத்துணர்வு தாரும். நீர் என்னோடு எப்பொழுதும் இருக்கின்றீர் என்பதை நான் அறிவேன்.

Scripture

Day 3Day 5

About this Plan

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.

More