BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample
நம்பிக்கை என்பது சூழ்நிலைகள் எவ்வாறு சிறந்த முறையில் செயல்பட முடியும் என்று தேர்வு செய்கிறது. இருப்பினும், வேதாகம நம்பிக்கை என்பது சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. உண்மையில், வேதாகமத்தில் உள்ள நம்பிக்கை நிறைந்த மக்கள் பெரும்பாலும் காரியங்கள் நல்ல முறையில் முடியும் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லாத சமயத்தில், அவர்கள் கடினமான நேரங்களை எதிர்கொள்ளும்போது, அவர்கள் எப்படியும் நம்பிக்கையையே தெரிந்தெடுத்தார்கள். உதாரணமாக, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய மீகா வாழ்ந்த சமயத்தில் தீமையும் அநீதியும் பெருகியிருந்தது ஆனால் அதற்கு மத்தியிலும் அவர் நம்பிக்கையோடு தேவனை நோக்கி பார்க்கிறார்.
வாசிக்கவும் :
மீகா 7:6-8
சிந்திக்கவும் :
6 வது வசனத்தில் மீகா பட்டியலிட்டுள்ள சில பிரச்சனைகளையும், 7 மற்றும் 8 வது வசனங்களில் அவர் எவ்வாறு பதிலளித்திருக்கிறார் என்பதையும் கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள சில பிரச்சனைகள் என்ன? மீகாவின் பதில் இன்று உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது அல்லது சவால் செய்கிறது?
தேவனிடம் மீகாவின் ஜெபத்தை எதிரொலிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவர் உங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Scripture
About this Plan
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More