YouVersion Logo
Search Icon

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் Sample

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

DAY 15 OF 17

25ம் வசனத்தோடு இயேசுவின் போதனை முடிந்துவிட்டதா? இயேசு தொடர்ந்து பேசுகிறார்; இன்றும் நம்மோடு பேசிக்கொண்டேதான் இருக்கிறார். இயேசுவின் போதனை எழுதிமுடித்து, மூடி முத்திரையிட்டு கட்டின மூட்டையல்ல. அது தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக பரிணாம வளர்சி பெற்று பலருடைய வாழ்விற்குத் திறனூட்டமும் உயிரோட்டமும் தந்துகொண்டுதான் இருக்கிறது. நினைப்பூட்டுகிறவராக அனுப்பட்ட தூய ஆவியானவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கேற்ப மாறிவருகிற கிறிஸ்தவப் பொறுப்பு பற்றிய சிந்தனைகளை இயேசுவின் போதனைகளுடன் இசைவுபடுத்தி, ஒப்பிட்டு, சீர்தூக்கி, மாற்றுக் குறையாவண்ணம் பாதுகாப்பவர் அவரே. கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத பழக்கங்களையும் கொள்கைகளையும் ”தீயது” என்று புறக்கணிக்கிறவரும் அவரே. (கவனிக்கவும்: தூய ஆவியானவர் பற்றிய இரண்டாவது கூற்று: "போதிக்கிற ஆவி”.

எனக்குப் பிரியமான தங்கை, தம்பி! இயேசுவின் போதனை காலாவதி ஆகிவிட்டதாக நினைக்கிறாயா? காலத்திற்கேற்ப அவற்றைப் புதுமைப்படுத்துகிறவர் யார்? இயேசு தரும் சமாதானம் “உலகம் தர முடியாதது” என்பதின் பொருள் என்ன? இதயத்தில் கலக்கம், பயம் என்பது என்ன? உன் இதயத்தில் இவை இருந்தால் நீ என்ன பண்ணுவாய்?

ஜெபம்:

நினைப்பூட்டும் தூய ஆவியானவருக்காக நன்றி. உம்முடைய போதனைகளை என்னுடைய இன்றைய சூழலுக்கேற்ப அவர் பொருள்பட செய்கிறார். உம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் வாழவில்லையோ என்று சிலவேளைகளில் சோர்ந்து போகிறேன். எனக்கு உதவும் இயேசுவே! 

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய்! ”எனக்கு உதவும் இயேசுவே!” என்ற இனிமையான ஒரு சிறு ஜெபம் செய்தாய். இரண்டு விதங்களில் நான் உனக்கு உதவக்கூடும்: ஒன்று, திடன்கொள் – என்னிடத்தில் எந்த எதிர்நோக்கும் இல்லை, தண்டனையும் இல்லை; இருப்பதெல்லாம் அன்புதான். கலங்காதே! இரண்டு, தூய ஆவியானவரின் ஆலோசனையின்படி நடக்க உனக்குத் தேவையான உதவி என்னிடத்தில் உண்டு. உன் பயணம் கடினமாகும் வேளையில் தோள் கொடுத்து உதவ நானிருக்கிறேன். பயப்படாதே!


Scripture

Day 14Day 16

About this Plan

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More