YouVersion Logo
Search Icon

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் Sample

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

DAY 14 OF 17

இதுவரை பேசாத யூதா எங்களுக்கு ஏன் இந்தச் சிறப்பு வெளிப்பாடு என்று கேட்க, இயேசு தாம் சொன்ன போதனையைப் பொறுமையாக ஒரு வியத்தகு மாற்றத்தோடும் ஓர் அற்புத இணைப்போடும் மீண்டும் சொல்கிறார்.  21 மற்றும் 23 ம் வசனங்களை ஒப்பிடுங்கள்: எது எதற்கு முன்னோடி? 21ல் கைக்கொள்பவன் அன்பாயிருக்கிறான். 23ல் அன்பாயிருக்கிறவன் கைக்கொள்கிறான். 21ன் “என் கற்பனை” 23ல் “என் வசனம்” என்று மாறிவிட்டது! 24ல் அதுவே “பிதாவினுடைய வார்த்தை” என்று விளக்குகிறார். இயேசு சொல்லும் அற்புத இணைப்புச் செய்தி என்னவென்றால், பிதாவாகிய கடவுளும் குமாரனாகிய கடவுளும் நம்மோடிருக்க வருகிறார்கள் என்பதுதான். 

அன்புத் தங்கை, தம்பி! உன்னில் இளைப்பாறுவதற்காக அவர்கள் வருகிறார்கள். சொந்த வீடுபோல ஆற அமர அவர்கள் தங்கி தரித்திருக்கப் போகிறார்கள். இயேசு மாட்டுத் தொழுவத்தின் எளிமைக்குப் பழக்கப்பட்டவர்தானே! கதவு தட்டும் சத்தம் கேட்டால் ஓடிப்போய் அன்புடன் கதவைத் திறந்துவிடு. வருவது அவர்கள்தான்; உன்னுடன் இளைப்பாறி மகிழ உரிமையுடன் வருகிறார்கள்.

ஜெபம்:

அன்பின் இயேசுவே, உமது வார்த்தையே நித்திய வாழ்வு; உம்மை நான் நேசிப்பதால் அவற்றைக் காத்துக்கொள்வேன். உம் குடியிருப்பாக என்னைத் தெரிந்துகொண்டதற்கு நன்றி. உமக்கு உகந்த உறைவிடமாக என்னைச் சுத்தம் செய்து விடுகிறேன். குடியிருக்க வாரும்!

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய்! உன் அன்பு பொன் போன்றது, நானும் என் பிதாவும் உன்னிடம் குடியிருக்க வருகிறோம். நான் கதவைத் தட்டும்போது தயவுசெய்து கதவைத் திறந்து எங்களை உள்ளே விடு. இதுவரை எனக்கு மூடி வைத்திருக்கும் உன் வாழ்வின் பகுதிகளை நீ கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து என்னை அங்கும் வரவேற்க நான் உனக்குத் துணைபுரிவேன். 


Scripture

Day 13Day 15

About this Plan

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More