ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்Sample
ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையை மேற்கொள்ள மூன்றாவது வார்த்தை ‘சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பதின் வழி’
என்னை பொறுத்தவரையில் ‘துடைப்பம்’ , நியாயத் தீர்ப்பின் ஒரு உருவகம். என்னுடைய தாய்மொழி தமிழில் ஒரு மேற்கோள் உண்டு! உணர்ச்சி வசப்பட்டு எரிச்சலடைந்தவர் "உன்னைத் துடைப்பத்தால் அடிப்பேன்" என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தன்னுடைய மக்களின் கடினமான இருதயத்தினிமித்தம் கடவுள் கோபப்பட்டதைப் பல இடங்களில் வாசிக்கிறோம். 78-ம் சங்கீதத்தில் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம்.. "அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனாலும் அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; ஆகவே, அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே, தேவ கோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று (சங் 78:29-31)". தேவன் விரும்பாத அந்த "போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே" என்ற வார்த்தையை கவனியுங்கள். கடவுளுடைய பொறுமைக்கு இடையூறு விளைவிக்கும்பொழுது, அவருடைய நியாயத் தீர்ப்பு வருகிறது . அவர் ‘துடைப்பம்’ முறையில் நியாயத் தீர்ப்பு செய்கிறார் . சரீரத்தை உருவாக்கினவரைத் (யேகோவா) தேடாமல், சரீர இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள விரும்பியவர்களைச் சங்கரிக்கிறார் . எந்த உணவை அவர்கள் சாப்பிடக்கூடாதோ, அதைச் இச்சித்து புசித்துக்கொண்டிருக்குபோதே அவர்கள் செத்து போனார்கள் . நாமும் மாமிச இச்சைக்கு இடம் கொடுத்து,, ஆபாச காட்சிகளைக் காணும்போது கடவுள் அவ்விதமாகவே தண்டிக்கலாம் . அவர் அவ்வாறு செய்யவில்லையெனில், அதை நாம் செய்தது சரியென்று அர்த்தமில்லை . நாம் மனம் திருப்ப வேண்டுமென அவர் நமக்கு வாய்ப்பு கொடுக்கிறார் (2 பேதுரு 3:9). ஆபாச காட்சிகளை பார்த்து கொண்டிருக்கும்போதே அவர் நம்மை சங்கரிக்க தீர்மானிக்க முடியும் . நடு ராத்திரி வேலையில் நாம் ஆபாச காட்சிகளை இணைய தளத்தில் தேடிக் கொண்டிருக்கும்போதே அவர் பூமிக்கு திரும்பி வர தீர்மானிக்க கூடும் . ‘திருடன் வருகிறதுபோல’ , இயேசு நாம் நினையாத நேரத்தில் வரக்கூடும் என்ற அறிவானது நாம் பரிசுத்தமாக வாழ தூண்டுகிறது. இக்கருத்தைதான் 2பேதுரு 3:10-11 -ல் பேதுரு குறிப்பிட்டு சொல்லுகிறார் . எல்லாம் கிருபை என போதிக்கும் கள்ள போதகர்கள். பரிசுத்தமான வாழ்வை ஊக்கப்படுத்துவதில்லை . பரிசுத்த வாழ்வை முக்கியப்படுத்துவதே சரியான உபதேசம். ."விழுந்து விடாதே" என்பதே புதிய ஏற்பாடு விசுவாசிகளுக்கு கூறும் அறிவுரையாகும் (1 கொரி 10:12). ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக" என்ற அறிவுரையை பவுல் 1 கொரிந்தியர் 10: 7-10-ல் குறிப்பிட்டுள்ளார்.
பிரியமானவரே , மேற்கூறிய மூன்று வார்தைகளான (Groom/Room/Broom) ஆத்தும நேசர், அறை, மற்றும் துடைப்பம் ஆகியவற்றின் படிப்பினைகள் மூலம் ஆபாசக் காட்சிகளின் இச்சைகளை ஜெயிக்க தேவன் உங்களுக்கு உதவுவாராக!
About this Plan
ஆபாசமான காட்சிகளைக் பார்க்கும்படி வருகின்ற சோதனையை ஜெயிப்பதற்குரிய வழியை , வேத புத்தகத்தின் அடிப்படையில் வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவியாக அமையும்:- “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” - யோவான் 8:32 .
More