YouVersion Logo
Search Icon

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்Sample

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்

DAY 1 OF 3

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையை  ஜெயிக்க  நமது  ஆத்தும  மணவாளனாகிய  இயேசுவின்  வழி:

"பிளேபாய்' ( Playboy)  என்ற ஆங்கில  பத்திரிக்கை 2016-ம் ஆண்டு , மார்ச்  மாதம்  முதல்,   பெண்களின்  நிர்வாண  படங்களை இனி  வெளியிடமாட்டோம்   என்ற  செய்தியை  அறிவித்தது. இந்த  செய்தியை  இந்திய நாளேடான  "டெக்கன்  கிரானிக்கல் "  என்ற  ஆங்கில  பத்திரிகை  அக்டோபர் 13, 2015 அன்று செய்தியாக   வெளியிட்டிருந்தது .  இவ்விதமான தீர்மானம்  எடுப்பதற்கு  என்ன  காரணம்  என்று  அந்நிறுவனத்தின்  தலைமை  செயல்  அதிகாரி  திரு .ஸ்காட்  பிளண்டர்ஸ்  பின்வருமாறு  கூறினார்: எமது  பத்திரிகை  மனித  இனத்தை  பாலியல்  பாவத்தில்  அடிமைப்படுத்த  யுத்தம்  நடத்தி, வென்றியும்  கண்டது. பாலியல் சம்மந்தமான  காட்சிகளை  எப்படியெல்லாம்  கற்பனை  செய்து  பார்க்கமுடியுமோ , இணையதளத்தில்  ஒரு கிளிக் (CLICK) செய்து  காணக்கூடிய  தொலைவில்தான்  உள்ளது. தற்போதைய  கால கட்டத்தில் ,அதுவும் மிகவும்  அசுர  வேகத்தில்  மனிதரைத்  தாக்குகிறது”.  இணையதள  ஆபாச  காட்சிகள்  ஒரு  மனிதனைச்  சோதிப்பதற்கு  எவ்வளவு  வலிமையுள்ளதாக  இருக்கிறது என்பதை  ஒரு கிளிக் (CLICK) செய்தால்  போதும் என்கிற  அவரது   மேற்கோள்  எடுத்துக் காட்டுகிறது.  . William M . Struthers என்ற புத்தக ஆசிரியர் , தன்னுடைய  ‘Wired for Intimacy’ என்ற புத்தகத்தில், ஆபாச  காட்சிகள்  எவ்வாறெல்லாம்   மனித  சிந்தனையை, பாவ  நிலைக்கு கடத்தி செல்கின்றது என்பதனை விளக்குகிறார். மூன்று  காரணங்களினால்  ஆபாச  காட்சிகளை  மேற்கொள்ளுவது  கடினமாகிறது  என்றும் அவர்   கூறுகிறார்.  காரணம், (1) ஆபாச காட்சிகள்  எளிதாக  அணுகக்கூடியது  (2) அதற்கான  செலவு  மிகவும்  குறைவு . (3) ஆள் யாரென்று  அடையாளம்  காண முடியாத  நிலை.  

நான்  திறந்த  வேதபுத்தகத்துடன்   தேவ பிரசனத்திற்குள்  சென்று, அதிக  தொல்லையாக இருக்கின்ற இந்த ‘ஆபாச  காட்சிகள்’ பற்றிய  சோதனைக்குத்  தீர்வைத்   தரவேண்டுமென்று  அவரிடம்  கேட்டபொழுது, ஆண்டவர் கவிதை  வடிவிலுள்ள  மூன்று  வார்த்தைகளை தந்தார். இந்த  வார்த்தைகள்,  ஆபாச படங்களை  பார்க்க  தூண்டும்   சோதனையை  ஜெயிக்க உதவும்.  இன்றைய  தியானத்தில்  அதனுடைய  முதல்  வார்த்தையை   நான்  உங்களோடு  பகிர்ந்து  கொள்கிறேன். அது (GROOM) மணவாளன்  என்ற   வார்த்தையே!

ஆபாச  காட்சிகள்  மூலம் வரும் சோதனையை  ஜெயிக்க  இதுவே முதல் படி:   நம்முடைய  மணவாளனாகிய   இயேசுவோடு உள்ள அன்பின்  உறவில்  நிலைத்திருந்தல் ;அவரே  நம்முடைய  பாவங்களுக்காக  ரத்தம்  சிந்தி  சிலுவையில்  மரித்தார்.  (மத்தேயு  25:1-13)   இயேசுவை   நமது  மணவாளனாக  எடுத்து  காட்டுகிறது. இயேசுவின்  மணவாட்டியாகிய  நாம் அவர் மீது  அதிக அதிகமாக காதல்  கொள்ளவேண்டும். மேலும்  இயேசுவின்  மீது  நாம்  வைத்திருந்த  ஆதி  அன்பை  விட்டுவிடக்கூடாது (வெளி.2:4). அவருடைய  அன்பின்   முகத்தைத்  தரிசிப்பதில் நாம்  ஆனந்தம் கொள்ள வேண்டும் . அவ்வாறு  செய்யும்போதுதான், இந்த உலகத்தின்  இச்சைகளும்  ஆபாச  மோகங்களும், விசித்திரமாக  குறைவதை  நாம்  உணரலாம். இயேசுவை  நம்முடைய  மணவாளனாக  ஏற்றுக் கொள்ளும்போது   அவருடைய எல்லா  கற்பனைகளுக்கும் நாம்  கீழ்ப்படிவோம். இந்த  கருத்தையே  வேதாகமம்  நமக்கு  திரும்ப, திரும்ப  கற்பிக்கிறது (யோவான்  14:15,23). இயேசுவை  அதிகமதிகமாக நாம்  நேசிக்கும்போது, எவ்வித  சிரமமின்றி  ஆபாச  இச்சைகளைத்  தவிர்த்து விடலாம். ஆனால் நாம்  விருப்பப்பட்டு, ஆபாச  காட்சிகளைப்  பார்க்கும்போது,   தெரிந்தே  இயேசுவுக்கு  விரோதமாக,   மனப்பூர்வமாகப் பாவஞ்செய்கிறவர்களாவோம். அவ்விதம்  தொடர்ந்து  செய்வது,       தேவனுடைய குமாரனை நமது  காலின்கீழ் மிதித்து, நம்மைப்  பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை   நிந்திப்பதுபோல இருக்கும் (எபி 10:26-29 பார்க்க ). இயேசுவை  நமது  மணவாளனாக  உருவகப்படுத்திக் கொண்டு, அவருடன்  நெருங்கிய  அன்பில்   இருக்கும் பொழுது  ஆபாச  காட்சிகளுக்கு  மறுப்பு சொல்வது  சுலபம்.  ஜெயமும்  நிச்சயம்!

Day 2

About this Plan

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்

ஆபாசமான  காட்சிகளைக்   பார்க்கும்படி  வருகின்ற  சோதனையை  ஜெயிப்பதற்குரிய வழியை , வேத  புத்தகத்தின்  அடிப்படையில்   வாசகர்கள் அறிந்து கொள்ள இது  உதவியாக  அமையும்:- “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” - யோவான்  8:32  .

More