YouVersion Logo
Search Icon

Plan Info

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்Sample

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

DAY 2 OF 5

“தேவன் தம்முடைய   இருதயத்தில் உங்களுக்கு முதலிடம் கொடுத்துள்ளார்”

நீங்கள் பாவம்   செய்யாதவர் போலவே உங்களைத் தேவன் பார்க்கிறார் என்று உங்களிடம் யாராவது சொன்னால், என்ன நினைப்பீர்கள்? உண்மையிலேயே, இயேசு சிலுவையில் நிறைவேற்றிய மீட்புப்பணியால்,   உங்களைப் பாவமே 

செய்யாதவராகத்தான்   தேவன் பார்க்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம்,   மன்னிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, விடுதலை அடைந்தவர்களாக இருக்கிறோம்!

அதன் அர்த்தம், நீங்கள் பரிசுத்தவான்: கிறிஸ்துவுக்குள் நீதிமானாக சிறப்பான நிலையில்   உள்ளீர்கள். தேவனுடைய கண்களுக்கு நீங்கள் குற்றமற்ற,   பூரணமான பரிசுத்தவான். அவர் உங்களை அவரது பிள்ளையென்றும்,   அவரது ஐஸ்வரியத்தின் வாரிசு என்றும், அவரது நண்பர் என்றும்   அழைக்கிறார்.

“நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” 1 பேதுரு 2:9

தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்கிற நமது   புரிந்துகொள்ளுதல் நாம் அவரை எப்படிக் காண்கிறோம் என்பதில்தான் உள்ளது. நாம்   எப்போது தவறு செய்வோம், கையும்   களவுமாய்ப் பிடிக்கலாம் என்று தூரத்திலிருந்து நம்மைக்   கண்காணித்துக்கொண்டிருப்பவர் தேவனல்ல. அப்படி நினைப்பதைப்போல உண்மைக்குப்   புறம்பானது வேறொன்றும் இருக்க முடியாது. 

கீழ்க்கண்ட வசனம் என்ன சொல்கிறது:

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.” – யோவான் 1:12-13

நம் ஒவ்வொருவரையும் விலையேறப்பெற்ற தமது சொந்தப்   பிள்ளையாகவே தேவன் கண்கிறார். தமது முடிவற்ற மனதுருக்கத்தின் பலனாக நம் மீது   ஆதரவையும் கவனத்தையும் பொழியும் அன்புத்தகப்பனாக இருக்கிறார். உன்னதப்பாடலின்   சில வசனங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள நெருக்கமான அன்பைத் தேவன் நம் மேல்   கொண்டுள்ள அன்புக்கு ஒப்பிடுகிறது. எபிரேயர் 11:6 தேவனைத்தேடுகிறவர்களுக்கு அவர்   பலன் அளிக்கிறவர் என்று சொல்கிறது.

நம்மில் அநேகர் தம்மைப்   பார்ப்பதைவிடவும் மிக மேலான வகையில் தேவன் நம்மைப் பார்க்கிறார். நாம்   இரட்சிக்கப்பட்ட வேளையில் கிறிஸ்து நம் வாழ்வில் ஆரம்பித்த கிரியைதான், தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்ற நம் புரிந்துகொள்ளுதலுக்கு   அடிப்படை. 

“அப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்   புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம்   புதிதாயின.”- 2 கொரி 5:17

“நாம்   அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”-   2 கொரி 5:21

இந்தப் புதுச்சிருஷ்டி தேவனுடைய தெய்வீக வேலை; நமது உள்ளான மனுஷனிலும், ஆவிக்குரிய நிலையிலும் முற்றிலும் மறுரூபமடைதல். நம்மை அவர் முற்றிலும் மன்னித்து, நமது கடந்த, நிகழ் மற்றும் வருங்காலப் பாவம் அனைத்திலிருந்தும் சுத்திகரித்தார். அவரோடு நேரிய உறவில் நாம் இப்போது இருக்கிறோம்.

“…மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.”-சங்.103:12

பாவப்பழுது   ஒன்றுமின்றி தேவனுக்கு அளிக்கப்பட்ட தேவஜனங்கள் நாம்; சிலுவையில் கிறிஸ்து செய்துமுடித்த கிரியையின்   நிமித்தமாக தேவனது நீதியாக நாம் மாறிவிட்டோம். மெய்யாகவே, தேவன் தம்முடைய இருதயத்தில் நமக்கு முதலிடம்   கொடுத்துள்ளார்.

Day 1Day 3

About this Plan

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசி...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy