YouVersion Logo
Search Icon

Plan Info

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!Sample

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

DAY 1 OF 8

“நீங்கள் தனித்து இருப்பதேயில்லை”

வாழ்க்கையில் பள்ளங்களும் மேடுகளும் மாறி மாறி வரும்.   மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உள்ள கணங்களும், சவால்களும் சந்தேகங்களும் உள்ள காலக்கட்டமும் கலந்த கலவைதான் வாழ்க்கை.   மலையுச்சியை நோக்கி சீராக ஏறும் பயணம் அல்ல; மாறாக, மலைகளும்   பள்ளத்தாக்குகளும் மாறி மாறி குறுக்கிடும். விசுவாசிகளும், விசுவாசிகளல்லாதோரும் ஒன்றுபோலவே வாழ்க்கையின் மேடு பள்ளங்களில்   பயணிக்கிறார்கள்.

ஆனால்,   கிறிஸ்தவர்களாகிய நமக்கோ நமது வாழ்வின் பள்ளங்களைக்கடக்கும் போது தனியே இருப்பதில்லை என்பது தேவன்   நமக்களித்திருக்கும் அற்புதமான வாக்குத்தத்தம். அவரது ஊக்கமளிக்கும் வார்த்தைகள்   இதோ:

“நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய  கர்த்தர்தாமே  உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை”- உபாகமம் 31:6

உண்மை என்னவென்றால், சவால்   நிறைந்த வேளை, ஜெயம் நிறைந்த வேளை இவ்விரண்டு வேளைகளிலுமே   தேவனது பிரசன்னம் நமக்குத் தேவை. தேவன் நம்மோடு இருப்பதை அறிந்துகொள்வதன் மூலம், வாழ்வின் ஒவ்வொரு சவாலையும் அழிவை நோக்கிய சறுக்கலாக இல்லாமல், வெற்றியை நோக்கிய படிக்கல்லாகக் கொள்ளமுடியும்.

தேவன் நம்மைச் சந்திக்க முடியாதபடி மிக உயர்ந்த மலையும்   இல்லை; மிகத்தாழ்ந்த பள்ளத்தாக்கும் இல்லை. நமது   சூழ்நிலை எப்படியிருந்தாலும் தேவன் உண்மையுள்ளவராக

இருந்து, நம்முடனே எப்போதும்   இருக்கிறார்.

 

Day 2

About this Plan

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

நீங்கள் தனித்திருக்கவில்லை.   வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும்,   நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும்   இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில்...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy