YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 69 OF 100

கர்த்தர் மேல் நம்முடைய பாரங்களை வைப்போம்!

நம்மை நாமே தாழ்த்தி, கர்த்தரிடம் நம்முடைய கவலைகளை யெல்லாம் ஏரெடுத்து, அவலைகளையெல்லாம் அவர்மேல் வைப்பது, மிகவும் முக்கியமானது. நாம் விசுவாசத்தினாலே கர்த்தர்மேல் நம்முடைய பாரங்களை வைக்கத் தயங்கக்கூடாது; ஏனென்றால் வேதம் இதைத்தான் சொல்லுகிறது.

“வைத்துவிடுங்கள்” என்ற வார்த்தைக்கு - பலத்துடன் வீசுவது, எழுப்புவது, அனுப்புவது, சுமத்துவது, திணிப்பது, வெளியே துரத்திவிடுவது, நீக்குவது என்று வரிசையாக கூறப்பட்டுள்ளது. எல்லாமே பலமான, அழுத்தமான வார்த்தைகள். கவலைப்படுவதை ஒரு பாவமாக கர்த்தர் கருதுகிறார் என்ற காரியத்தை நம்புவதே, சிலருக்கு கடினமாக உள்ளது. எனவே, நாம் ஆவிக்குரியரீதியில், வேகமாக, தீவிரமாக, நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைக்கவேண்டும். உன்னதமானவருடைய மறைவில், சர்வவல்லவருடைய நிழலில் நாம் தங்கவேண்டும்.

குற்ற உணர்விலிருந்து விடுபட, எனக்கு நிறைய ஆண்டுகளானது. என்னுடைய மனதிலும், ஆவியிலும், கல்வாரி சிலுவையில் அவர் எனக்கு செய்தவற்றினிமித்தம், நான் கிறிஸ்துவுக்குள் தேவனின் நீதியாக மாற்றப்பட்டு விட்டேன் என்று அறிந்திருக்கிறேன். ஆனாலும், அதை ஏற்று வாழ்வதற்கு, உணர்ச்சிகளின் ரீதியில் எனக்கு கடினமாக இருந்தது. பிசாசனவன் தொடர்ந்து என் உணர்வுகளைத் தாக்கிக்கொண்டே இருந்ததால், நான் குற்ற உணர்வில் சிக்கித் தவித்தேன். என்னுடைய கடந்த காலத்தையே நினைத்து, கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். இதை எப்படி நான் மேற்கொள்வது? பல ஆண்டுகளாக இந்த நினைவுகளோடு போராடிக்கொண்டிருந்தேன், கடைசியில் வெறுத்துப்போய் விட்டேன். பிசாசைப் பார்த்து, “உன் பொய்களை நான் நம்பப் போவதில்லை! இயேசுவானவர் என்னை தேவனுடைய நீதியாக ஆக்கிவிட்டார். அவர் எனக்கு தந்ததை, நான் பெற்றுக்கொள்ள தீர்மானித்துவிட்டேன்!”

சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தினாலே, நான் நீதிமானாக்கப்பட்டேன் என்று வேதத்திலிருந்து நான் அறிந்துகொண்டேன். இயேசுவானவர் எனக்காக செய்து முடித்த எல்லாவற்றையும், என் மனதில் நான் சிந்திக்கத் தீர்மானம் பண்ணினேன். வேத வசனங்களை அறிக்கை செய்யத் தொடங்கினேன். பிசாசு இன்னும் என் மனதையும், உணர்ச்சிகளையும் தாக்கிக்கொண்டிருந்தான். முடிவில், எனக்குள் ஒரு தெய்வீக வைராக்கியம் எழும்பினது. அது என்னை விடுவித்தது.

கர்த்தர் எனக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியாமல்; என்னைத் தடுத்த வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகள், மற்றும் துரைத்தனங்களுக்கும் விரோதமாக; பலமாக, முரட்டுத்தனமாக எழும்பினேன். நிறைய நேரங்களில், பிசாசின் மேலும் அவன் கூட்டாளிகளின் மேலும் கோபப்படாமல், அவன் இயக்கும் மனிதர்கள்மேல் நாம் கோபப்படுகிறோம்.

சாத்தான் மீது எப்படி நாம் தயங்காமல் ஒரு தெய்வீக வைராக்கியத் தோடு கோபப்படுகிறோமோ; அதைப்போலவே, கர்த்தரிடத்தில் நம்முடைய பாரங்களை வைக்கவும், நாம் ஒருபோதும் தயங்கவேண்டிய அவசியமே இல்லை!

நம் அனைவருக்குமே, சரி செய்ய வேண்டிய சில ஆவிக்குரிய பிரச்சி னைகள் இருக்கத்தான் செய்யும். அவை எதுவாயிருந்தாலும், அவை களை எல்லாம் கர்த்தர்மேல் வைத்துவிட்டு, தேவன் நமக்கு தரும் சந்தோஷம், சமாதானம் மற்றும் இளைப்பாறுதலில் நாம் நிறைந்திருக்க வேண்டும்.

நம்முடைய பாரங்களை, கர்த்தர்மேல் வைக்கவேண்டும் என்று பேதுரு கூறுகிறார் (1 பேதுரு 5:7ல்) சொல்லப்பட்டிருக்கும் “கவலை” என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் - “பல திசைகளிலிருந்து இழுக்கப்படுதல், அல்லது திசைத் திருப்பப்படுவது” என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிசாசு ஏன் நமக்கு கவலையைத் தருகிறான்? தேவனோடுள்ள நம்முடைய ஐக்கியத்தைத் திசைத் திருப்புவதே அவனுடைய முழுநோக்கம். பிசாசு நம்மேல் பாரங்களை சுமத்தும்போது, அதை கர்த்தரிடம் கொண்டுபோய், அவர் மேல் வைத்து விடும் சிலாக்கியம், நமக்கு கிடைக்கிறது. நீங்கள் அதை கொடுக்கும்போது, தேவன் உடனே அதை தன்மேல் எடுத்துக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறார். பிசாசு நம்மேல் வைக்கும் கவலைகளை துடைத்துப்போட நம்முடைய கர்த்தருக்குத் தெரியும்.

பிசாசின் சதித்திட்டங்களை முறியடிக்க, தேவன் நமக்கு அருமையான இரண்டு ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறார். முதலாவது, உங்களை நீங்கள் தாழ்த்தி தேவனிடம் திரும்புவது. அடுத்ததாக, பிசாசு உங்கள்மேல் கவலைகள் மற்றும் பாரமானவற்றை சுமத்தும்போது, நீங்கள் உடனடியாக அதை கர்த்தர்மேல் வைத்துவிட்டால் - அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், சந்தோஷமாக தன்மேல் அவைகளை ஏற்றுக்கொள்கிறார்.

கவலையைக் குறித்து யோசிக்கும்போது, அது நம்முடைய பெருமை யான செயலாக இருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன். கவலைப்படு கிறவர்கள், தாங்களே பிரச்சனைகளை தீர்த்துவிடமுடியும் என்று நினைத்து கவலைப்படுகின்றனர். இது பெருமையில்லையா? இதை செய்துகொள்ள என்னால் முடியும் என்று சொல்வது போல் அல்லவா உள்ளது? பெருமையாக இருப்பவர்கள், எனக்குபெலன் இருக்கு, என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே தாழ்மையாய் இருப்பவர்கள், தங்களுடைய பலவீனங்களை அறிந்தவர் களாய், இயேசு கிறிஸ்துவின் பெலத்தை, தங்கள் பெலவீனத்தில் உணருகிறார்கள்.

கொரிந்து சபைக்கு எழுதும்போது, பவுல், இதைத்தான் கூறுகிறார். “அதற்கு அவர்: என் கிருபை உனக்கு போதும்; பலவீனத்திலே என்னுடைய பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என் மேல் தங்கும்படி, என் பலவீனங்களை குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரிந்தியர் 12:9).

கர்த்தரிடம் கொடுக்காமல், நம்முடைய பாரங்களை நாமே சுமக்கும்போது, நாம் தோல்வியடைகிறோம். கர்த்தர் ஒருவரால்தான் நம்மை விடுவிக்க முடியும் என்பதை, நாம் அறிந்துகொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகிறார். தேவன்மேல் உங்கள் கவலைகளை வைத்து விட, நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். அவரே எல்லாவற்றையும் ஆளுகிறவர், உங்களை நடத்துகிறவராயிருக்கிறார்.


அன்பான பிதாவே, பிரச்சனை வருவதற்கு முன்பாகவே உமக்கு நன்றி சொல்லுகிறேன். என்னுடைய மனதை தாக்கும் எதிரியை, எப்படி முறியடிப்பது என்று நீர் எனக்கு கற்றுத் தந்திருக்கிறீர். அவனை வென்று, அதை எனக்கு முன் மாதிரியாக காட்டியும் இருக்கிறீர். நான் என்னைத் தாழ்த்தவும், என் கவலைகளையெல்லாம் உம்மேல் வைத்து விடவும், எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

Scripture

Day 68Day 70

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More